For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எலேஷ்..ராக்கி.. 'கிஸ்', 'கிஸ்'!

  By Staff
  |

  Rakhi Sawant with Elesh Parujanwala
  ராக்கி சாவந்த் - எலேஷ் பருஜன்வாலா கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. இருவருக்கும் பெரும் சண்டையாகி விட்டது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தங்களைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ரியாலிட்டி ஷோவில் இருவரும் டிவி கேமரா முன் உதட்டோடு உதடு வைத்து ஆழமான முத்தம் கொடுத்துள்ளனராம்.

  சுயம்வரம் நடத்தி ராக்கி தேர்ந்தெடுத்த மணமகன்தான் எலேஷ் பருஜன்வாலா. கனடாவில் வசித்து வரும் இந்தியரான எலேஷ், சில காலம் கழித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விரும்பியதால் ராக்கி - எலேஷ் கல்யாணம் உடனடியாக நடைபெறவில்லை.

  இந்த நிலையில் தற்போது இருவரும் என்டிடிவியின் பதி, பத்னி அவுர் வோ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளனர்.

  இந்த ஷோவின்போது இருவருக்கும் இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் கல்யாணம் செய்து கொள்ளும் முடிவை இருவரும் ரத்து செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ரியாலிட்டி ஷோவின் இறுதியில் இந்த முடிவை ராக்கி அறிவிப்பார் என்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.

  ஆனால் அதற்கு நேர் மாறாக ராக்கியும், எலேஷும், ரியாலிட்டி ஷோவில் கலக்கிக் கொண்டிருப்பதாக புதிய செய்தி வந்துள்ளது.

  ஷோவின்போது இருவரும் படு நெருக்கமாக பழகி வருவது ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. தங்களை கேமரா கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறந்து, தங்களைச் சுற்றியிருப்பவர்களையும் மறந்து ராக்கியும், எலேஷும் கொடுத்துக் கொண்ட சூடான முத்தக் காட்சிதான் அந்த புதுச் செய்தி.

  ரியாலிட்டி ஷோவின் ஒரு விதிப்படி, ராக்கி கர்ப்பிணி போல நடிக்க வேண்டும். மனைவி கர்ப்பமாக இருந்தால் கணவர் எப்படியெல்லாம் நடந்து கொள்வார் என்பதைக் கணிப்பதற்காக இந்தக் காட்சியாம்.

  அதன்படி கர்ப்பிணி போல ராக்கியை மாற்றுவதற்காக அவரது வயிற்றுப் பகுதியில் துணி மூட்டைகளை கட்டியிருந்தனர். மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் எந்த மாதிரியான வேதனையையெல்லாம் அனுபவிப்பாரோ அதையெல்லாம் ராக்கி செய்தார்.

  அப்போது எலேஷ் மிகுந்த அக்கறையுடன் ராக்கியைக் கவனித்துக் கொண்டாராம். இதனால் நெகிழ்ந்து போன ராக்கி, எலேஷின் உதட்டுடன் உதடு வைத்து நீண்ட நேரம் முத்தம் கொடுத்துள்ளார். இது காமராவில் பதிவாகியுள்ளதாம்.

  இந்த முத்தத்தின் மூலம் தங்களைப் பற்றி எழுந்த அனைத்து சந்தேகங்களையும் அடக்க இந்தத் தம்பதி முயன்றுள்ளதாம்.

  தங்களது ஷோவுக்கு பாப்புலாரிட்டியை அதிகரித்துக் கொள்ள, இப்படியெல்லாம் செய்தியைப் பரப்புவது?.

  என்டிடிவிக்கு நோட்டீஸ்...

  இதற்கிடையே, பதி, பத்னி ஆர் வோ நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தக் கோரி டெல்லியைச் சேர்ந்த தேசிய சிறார் உரிமை பாதுகாப்பு கமிஷன் என்டிடிவி இமேஜின் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  மேலும் இதுதொடர்பாக ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி அவருக்கும் சிறார் உரிமை பாதுகாப்பு கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.

  முன்னதாக மும்பையைச் சேர்ந்த அனுராதா சஹஸ்ரபுத்தி என்பவர் இதுதொடர்பாக சிறார் உரிமைப் பாதுகாப்பு கமிஷனுக்கு ஒரு புகார் அனுப்பியிருந்தார்.

  அதில், பதி, பத்னி அவுர் வோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஐந்து ஜோடிகளுக்கும் ஒரு குழந்தை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐந்து குழந்தைகளும், அந்த ஜோடிகளின் சொந்தக் குழந்தை கிடையாது. இது அப்பட்டனமான சிறார் உரிமை மீறலாகும்.

  மேலும், இந்தக் குழந்தைகள் புதியவர்களிடம் விடப்பட்டுள்ளதால், மிகவும் அசவுகரியமாக இருக்கின்றன. தொடர்ந்து அழுது கொண்டே உள்ளன.

  இப்படி பச்சிளம் குழந்தைகளை விளம்பரத்திற்காக இவ்வாறு கையாளுவது கண்டனத்துக்குரியது, ஆட்சேபனைக்குரியது. இது குழந்தைகளை தவறாக கையாளுவதாகும்.

  மேலும் சிறார் நீதிச் சட்டத்தின் 23/26வது பிரிவை மீறும் செயலும் ஆகும். எனவே இந்த நிகழ்ச்சியை தடுத்து தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X