»   »  சுந்தர்-நதியாவின் 'அமைதிச் சண்டை'

சுந்தர்-நதியாவின் 'அமைதிச் சண்டை'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Namitha with Sundar
சுந்தரும் நதியாவும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...! ஆனால் இது வம்புச் சண்டை இல்லை, அமைதிக்காக போடும் நல்ல சண்டையாம்.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் சண்டை படத்துக்காகத்தான் அந்த சண்டையே.

சுந்தர் சியின் மாமியாராக நடிக்கிறார் 'திருமதி ஸ்ட்ரிக்ட்' நதியா இந்தப் படத்தில். மாப்பிள்ளை படத்தில் ரஜினியின் மாமியாராக வந்து வெளுத்து வாங்குவாரே ஸ்ரீவித்யா, அந்த மாதிரி ஒரு அம்சமான மாமியாராகக் கலக்கியிருக்கிறாராம் நதியா.

அவருக்கு மருமகனாக வரும் சுந்தரும் பின்னியெடுத்திருக்கிறாராம், நடிப்பிலும் அதிரடியிலும்.

சுருக்கமா சொல்லுங்க... இது பூவா தலை படத்தோட உல்டாதானே என்றோம் ஷக்தி சிதம்பரத்திடம்.

லேசாக சிரித்தபடி, கிட்டத்தட்ட அதே போலத்தான். ஆனால் இதன் பின்னணியே வேறு. ஒரு பெரிய குடும்பத்தில் பெண்ணெடுக்கும் நல்ல மருமகனுக்கும், முரட்டுத்தனமான மாமியாருக்கும் இடையே நடக்கிற சண்டை, எப்படி மொத்த குடும்பத்துக்கும் சமாதானத்தைக் கொண்டு வருதுங்கிற, நாட்டுக்கு இன்றைக்குத் தேவையான (பூவா தலையா, மாப்பிள்ளை கதைகளும் இதேதானே!) நல்ல விஷயத்தை நகைச்சுவை, கிளாமர்னு போரடிக்காம சொல்லியிருக்கேன் இந்தப் படத்துல... என்கிறார் ஷக்தி.

அவர் மேலும் கூறுகையில், படத்தில் முதலில் நமீதா கிடையாது. அட, நம்ம படத்துல நமீதா இல்லேன்னா எப்படின்னு யோசிச்சு (அதானே), அவருக்காகவே ஒரு கேரக்டரை உருவாக்கினேன்.

கவர்ச்சியில் பொளந்து கட்டியிருக்கிறார் நமீதா. அவருக்கு தனியா கவர்ச்சி டிரஸ் தேட வேண்டிய அவசியமே இல்லாம போயிடுச்சி (என்னங்க இது, டிரஸ்னு ஆபாசமா பேசிக்கிட்டு). நமீதா வந்து நின்னாலே அந்த இடமே கவர்ச்சிமயமாயிடுது.

இந்தப் படத்துல அவர் ஒரு நடனக்காரியா வந்து சுந்தர் சியைக் காதலிக்கிறாங்க... என முடிந்தவரை விரிவாக நமீதா புராணத்தைப் பாடி முடித்தார் ஷக்தி.

படத்துக்கு 'சக்தி'யூட்டும் விஷயம் எது என்பது ஷக்திக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil