twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரஹ்மான் போட்ட ரூட்டு...' - உற்சாகத்தில் லேகா ரத்னகுமார்!

    By Staff
    |

    Leka Rathna kumar
    இன்று உலகம் முழுக்க அதிகம் தேடப்படும், தேவைப்படும் இசையாக மாறியுள்ளது இந்தியாவின் பாரம்பரிய / மாடர்ன் இசை. காரணம்... நம்ம இசைப்புயல்தான்!

    ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் ஒரிஜினல் இசை மற்றும் பாடல்களுக்காக ரஹ்மான் ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகளை வென்ற பிறகு இந்திய இசையை அதிகம் விரும்பிக் கேட்கிறார்களாம் சர்வதேசத்தினரும்.

    குறிப்பாக முன்கூட்டியே இசையை உருவாக்கி நூலகங்களாக வைத்திருக்கும் ஹாலிவுட் நிறுவனங்கள் பல, தங்களின் லைப்ரரிக்கு விதவிதமான இந்திய இசைத் தொகுப்புகளை உருவாக்கித் தருமாறு கேட்டு வருகிறார்களாம். இந்த நிறுவனங்கள் இதற்காக இந்தியாவில் தொடர்பு கொள்ளும் ஒரே நபர் இன்றைய தேதிக்கு லேகா ரத்னகுமார் மட்டும்தான்.

    உலகின் நம்பர் ஒன் இசை உற்பத்தி நிறுவனமான சோனாட்டனின் இந்தியப் பிரதிநிதியாக 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்துவரும் லேகா ரத்னகுமாரிடம் இதுகுறித்து பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனவாம் ஹாலிவுட் இசை நிறுவனங்கள்.

    இதுகுறித்து லேகா ரத்னகுமார் நம்மிடம் கூறுகையில், "இன்று உலகில் அதிகம் விரும்பப்படும் இசை என்றால் அது இந்திய இசைதான். முன்பு நான் ருத்ரதாண்டவம் எனும் இசையை உருவாக்கினேன். இதனை அப்படியே பிபிசிகாரர்கள் ஒரு காட்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு யானையும் புலியும் மோதிக் கொண்ட காட்சியின் உக்கிரத்தைக் காட்ட இந்த இசையை பயன்படுத்தினார்கள்.

    அதேபோல பல மேற்கத்திய படங்களில் மனித உணர்வுகளைச் சரியாகக் காட்ட இந்திய இசையைக் கேட்கிறார்கள். நான் சோனாட்டான் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நேர்மை, துல்லியமான கணக்கு, நம்பகத்தன்மை.. இவைதான் சோனாட்டானுடன் என்னை இன்னும் பயணிக்க வைக்கின்றன.

    என்னைப் பற்றி சோனாட்டான் மற்றும் இணையதளங்கள் மூலம் அறிந்து, பல ஹாலிவுட் இசைத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்தவண்ணம் உள்ளனர்.

    இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா புறப்படுகிறேன். அங்கு அனைத்து இசை தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துகிறேன்.

    இனி இந்தியாவில் அனைத்து வகை இசையும் லேகா சோனாட்டான் நிறுவனத்தின் லைப்ரரியில் கிடைக்கும் என்ற நிலை உருவாகும். அதே போல உலகின் பல நாடுகளிலும் முன் தயாரிக்கப்பட்ட இந்திய இசை வேண்டுமானால் அது லேகா ஸ்டுடியோ தயாரிப்பாக கிடைக்கும். இந்த நிலை உருவாக வேண்டும் என்றுதான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் பாடுபட்டேன். அது விரைவில் கைகூடவிருக்கிறது..." என்றார்.

    அது மட்டுமல்ல, இந்த பயணத்தின் போது அவர் NAB Show எனும் சிறப்பு கருத்தரங்கிலும் பங்கேற்கிறார். இங்குதான் உலகின் அத்தனை தொழில்நுட்ப உன்னதங்களையும் முதலில் வெளியிடுவார்களாம். நம்ம ரஹ்மான் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்களாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X