twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா 65!

    By Staff
    |

    Ilayaraja
    இந்தியத் திரையுலகின் இன்னிசைச் சக்கரவர்த்திகளில் இளையராஜாவுக்கு தனி இடம் உண்டு. தென்னகத் திரைவானின் 'லெஜெண்டு'களில் ராஜாவும் ஒருவர்.

    இசைஞானிக்கு இன்று 65வது பிறந்த நாளாகும். வழக்கம் போல எளிமையான முறையில் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ராஜா. ஆனால் அவரது இசையமைப்பில் உருவாகியுள்ள கலைஞரின் உளியின் ஓசை படத்தின் இசை வெளியீடு இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார். இளையராஜாவைக் கெளரவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    1976ம் ஆண்டு அன்னக்கிளி மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, 1000மாவது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இற்கு முன்பு இந்த சாதனையைச் செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே. இதுவரை அனைத்து மொழிகளிலும் இளையராஜா இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 4000க்கும் மேலாகும்.

    லண்டன் ராயல் பில் ஹார்மோனிக் ஹாலில், சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்திய ஒரே இந்திய இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. திருவாசகத்தை ஒரடோரியா என்ற இசை வடிவில் கொடுத்து சமீபத்தில் சாதனை படைத்திருந்தார் ராஜா.

    வாழ்த்துக்கள், ராஜா!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X