»   »  'இயந்திரனா', 'இயந்திராவா'?

'இயந்திரனா', 'இயந்திராவா'?

Subscribe to Oneindia Tamil
Rajini
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள பிரமாண்டப் படமான ரோபோட்டுக்கு இயந்திரன் என்ற தமிழ்ப் பெயரை படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுஜாதா பரிந்துரைத்துள்ளாராம்.

மிகப் பிரமாண்டமான அளவில் ஷங்கர் இயக்கத்தில், உருவாகவுள்ள ரோபோட் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால், அதைத் தமிழ்ப்படுத்த முடிவு செய்யப்பட்டது. நல்ல தமிழ்ப் பெயரை செலக்ட் செய்யும் வேலையை சுஜாதாதாவிடமே ஒப்படைத்தார் ஷங்கர்.

சுஜாதாவும் தீவிர பரிசீலனைக்குப் பின்னர் இயந்திரன் என்ற பெயரை ஷங்கரிடம் பரிந்துரைத்துள்ளாராம்.

சுஜாதாவின் என் இனிய இயந்திரா, ஜீனோ ஆகிய கதைகளின் கலவைதான் ரோபோட் படத்தின் கதை. ஜீனோ என்பது கதையில் வரும் இயந்திர நாய். நாவலின் இரண்டாம் பகுதியில், ஜீனோதான் கிட்டத்தட்ட ஹீரோ போல இடம் பெறுகிறது.

இயந்திரன் என்ற டைட்டிலோடு, இயந்திரா என்ற பெயரையும் சுஜாதா பரிந்துரைத்துள்ளாராம். இதில் ஏதாவது ஒன்று படத்துக்கு பெயராக வைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தப் பெயர் ரஜினிக்கும் பிடித்து விட்டதாம். இருப்பினும் இன்னும் கொஞ்சம் கேட்சி ஆன பெயராக இருந்தால் சொல்லுங்களேன் என்று சுஜாதாவிடம் கூறியுள்ளாராம் ரஜினி.

படத் தொடக்க விழாவுக்கு முன்னதாக பெயரை அறிவிக்க வேண்டும் என்பதால் விரைவில் டைட்டிலைப் பரிந்துரைக்குமாறு சுஜாதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil