twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் தொலைக்காட்சிக்கு வயசு 3!

    By Staff
    |

    Makkal TV
    உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு தினந்தோறும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கு 3 வயதாகிறது. இதையொட்டி மதுரை மாநகரில் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு செப்டம்பர் 6ம் தேதியன்று 3வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி 3ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் உள்ள ராஜா முத்தையா அரங்கில் மாலை 4 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    நாட்டுப்புறப் பாட்டு, உருமி மேளம், காவடி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பாரம்பரிய நடனங்களோடு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது.

    தொடர்ந்து நெல்லை தமிழ், குமரி தமிழ், கொங்கு தமிழ், சென்னை தமிழ், மதுரை தமிழ், ஈழத்தமிழ், உலகத்தமிழ் ஆகியவை குறித்து தமிழறிஞர்களின் கருத்துரைகள் இடம் பெறுகின்றன.

    மக்கள் தொலைக்காட்சியின் தனிச்சிறப்புகள் குறித்து பல் துறைப் பிரபலங்கள் பேசுகின்றனர்.

    திருப்பூர் கிருஷ்ணன், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயக்குனர்கள் சீமான், அமீர், முனைவர் வசந்திதேவி, கே.ஏ. குணசேகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    தொடக்க விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். மக்கள் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் வேணு சஞ்சீவி வரவேற்புரை ஆற்றுகிறார். முதன்மை செயல் அலுவலர் சிவக்குமார் நன்றியுரை வழங்குகிறார்.

    மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழா பேருரை ஆற்றுகிறார்.

    நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X