twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷிப்ட் ஆகும் போஜ்பூரி சினிமா!

    By Staff
    |

    Nagma in Bhojpuri film
    மும்பையில் வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், போஜ்பூரி திரையுலகம், மும்பையை விட்டு உ.பி. அல்லது பீகாருக்குப் போக திட்டமிட்டுள்ளது.

    இந்தியத் திரையுலகின் குட்டி உலகம் போஜ்பூரி. ஆண்டுக்கு 70 படங்கள் வரை இங்கு தயாரிக்கிறார்கள். மொத்தமே ரூ. 200 கோடி மதிப்பிலானது போஜ்பூரி திரையுலகம். இரண்டரை கோடி பேர் போஜ்பூரி படங்களைப் பார்க்கிறார்கள்.

    மும்பையில்தான் போஜ்பூரி திரையுலகம் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 50 தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு உள்ளன.

    மனோஜ் திவாரி, ரவிகிஷன், நக்மா உள்ளிட்டோர் போஜ்பூரி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர்.

    இந்த நிலையில வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதலால் போஜ்பூரி திரையுலகம் கவலையில் ஆழ்ந்துள்ளது. தாங்களும் தாக்கப்படக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து உ.பி. அல்லது பீகாருக்குப் போய் விடலாமா என்ற எண்ணத்தில் போஜ்பூரி திரையுலகினர் உள்ளனராம்.

    இதுகுறித்து நடிகர் மனோஜ் திவாரி கூறுகையில், லக்னோவில் போஜ்பூரி திரையுலகின் செயல்பாடுகளை மாற்றுவது குறித்து உபி. மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுபாஷ் பாண்டே மூலம் விண்ணப்பித்துள்ளோம்.

    இதுதவிர பீகார் தலைநகர் பாட்னா, டெல்லி, நோய்டா ஆகிய நகரங்களையும் யோசித்து வைத்துள்ளோம்.

    எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. பயத்தின் நிழலில் மும்பையில் வாழ்ந்து வருகிறோம். வெளிப்புறப்படப்பிடிப்புகளின் போது எங்களை ராஜ் தாக்கரே கட்சியினர் மிரட்டுகின்றனர் என்றார் அவர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X