»   »  'ஓடற மாதிரி படமெடுங்க'

'ஓடற மாதிரி படமெடுங்க'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vikram with Trisha

பொங்கலுக்கு வெளியான ஆறு படங்களில் ஒன்று கூட சொல்லிக் கொள்கிற மாதிரி வசூலை தரவில்லை. இதனால் இயக்குநர்கள் நல்ல படங்களைத் தர வேண்டும் என இயக்குநரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் வேதனையுடன் கூறினார்.

சென்னையில் நடந்த திரை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பொங்கல் ரிலீஸ் படங்கள் குறித்து வருத்தப்பட்டார். அவர் பேசுகையில்,

கடந்த ஆண்டு நிறைய படங்கள் வெளியாகின. பெரும்பாலானவை தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தன. தமிழக அரசு அளித்துள்ள சலுகைகள் அப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தன.

ஆனால் இந்தப் புத்தாண்டின் ஆரம்பமே சரியில்லை. பொங்கல் படங்கள் ஒன்று கூட லாபகரமாக இல்லை. தயாரிப்பாளர்களை பெரும் நஷ்டத்தில் தள்ளியுள்ளன. இதிலிருந்து மீண்டு வரவே நீண்ட நாட்கள் ஆகும் போலிருக்கிறது.

அரசு அளித்துள்ள சலுகைகளைப் பயன்படுத்தி நல்ல படங்களை, வணிக ரீதியாக ஓடுகிற படங்களை எடுப்பதில் இயக்குநர்கள் அக்கறை காட்ட வேண்டும். இனி வரவிருக்கும் படங்களில் அதைச் செய்வார்கள் என நம்புகிறேன் என்றார் ராம நாராயணன்.

பொங்கல் படங்களில் பீமா முதல் வாரத்திலேயே ரூ. 22 கோடி வசூலித்துவிட்டதாகவும்
இன்னொரு பக்கம் பிரிவோம் சந்திப்போம் படமும், பழனியும் லாபம் சம்பாதித்துக் கொடுத்திருப்பதாகவும் சிலர் செய்திகளைப் பரப்பி வரும் சூழலில், தயாரிப்பாளர் சங்கத் தலைவரே இப்படி போட்டு உடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil