»   »  கமல் மூலம் வரும் 'சோனி'!

கமல் மூலம் வரும் 'சோனி'!

Subscribe to Oneindia Tamil
Kamala Hasan
சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற சோனி பிஎம்ஜி நிறுவனம், கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் பாடல்கள் தயாராகி விட்டன. மார்ச் மாதம் முதல் வாரம் உலகெங்கும் இது வெளியிடப்படவுள்ளது. இந்தித் திரையுலகின் இசைப் புயல் ஹிமேஷ் ரேஷமிய்யா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆடியோ உரிமையை சோனி வாங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் கால் பதிக்கிறது சோனி. ஏற்கனவே திரைப் பாடல்கள் அல்லாத ஆல்பங்கள், சில திரைப்பட பாடல்களை சோனி மியூசிக் என்ற பெயரில் சோனி ஏற்கனவே தமிழில் வெளியிட்டுள்ளது.

இப்போது சோனி பிஎம்ஜி என்ற பெயரில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது சோனி. தசாவதாரத்தைத் தொடர்ந்து மேலும் பல படங்களின் ஆடியோவை வெளியிடவும் சோனி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சோனி பிஎம்ஜி நிறுவனத்தின் இந்தியா பிரிவு நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்ரமணியம் கூறுகையில், தசாவதாரம் போன்ற படத்தின் ஆடியோவை வெளியிடுவது பெருமைக்குரியது. இது எங்களது மறு வருகைக்கு மிகவும் முக்கியமானது. ஊக்கம்தருவதாக உள்ளது.

தசாவதாரத்தின் பிற மொழிப் பதிப்புகளின் பாடல்களையும் நாங்களே வெளியிடவுள்ளோம் என்றார்.

இப்படத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் சிஐஏ உளவாளியாக நடிக்கிறார். படத்தில் ஆசின், மல்லிகா தவிர ஜெயப்பிரதாவும் இருக்கிறார்.

ரூ. 60 கோடி செலவில் இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் உருவாக்கியுள்ளார். ஏப்ரல் 10ம் தேதி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil