»   »  நான் கடவுளில் நர மாமிசம்?

நான் கடவுளில் நர மாமிசம்?

Subscribe to Oneindia Tamil
Arya

2 வருடங்களாக தயாரிப்பில் இருக்கும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துக் கொண்டிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நர மாமிசம் உண்வது போன்ற கிளைமேக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.

நான் கடவுள் படம் பூஜை போடப்பட்ட நாளிலிருந்தே நாளொரு வதந்தியம், பொழுதொரு பரபரப்புமாக போய்க் கொண்டிருக்கிறது. இப்போது கிளம்பியுள்ள புதிய வதந்தி இதுவரை வந்த வதந்திகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரியாகவும், திகிலைக் கிளப்பும் விதத்திலும் உள்ளது.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சி சமீபத்தில் காசியில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார். இந்த காட்சியில், மனிதனைக் கொன்று அவனுடைய மாமிசத்தையே சாப்பிடுவது போன்ற ஒரு கொடூரமான சம்பவம் இடம் பெற்றுள்ளதாக நான் கடவுள் யூனிட் ஆட்கள் சிலர் தெரிவித்தனர்.

ஆனாலும், இதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த பதிலையும், இயக்குநர் பாலா தரப்பிலிருந்து பெற முடியவில்லை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், படத்தைத் தயாரிக்கும், சிவஸ்ரீ சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் இருவரும் பாலாவிடம் தயவுசெய்து இம்மாதிரி கிளைமேக்ஸை வைத்து விடாதீர்கள். எதற்கும் மாற்று கிளைமேக்ஸ் ஒன்றை தயார் வைத்து கொள்ளவும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்களாம்.

பாலாவும் பெரிய மனது பண்ணி, இப்போது 2வது கிளைமேக்ஸ் காட்சிக்கு மீண்டும் காசிக்கு செல்லப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil