twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மக்கள் தொடர்பு நாயகன்' நிகில்!

    By Staff
    |

    Nikil Murugan
    தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் தொடர்பாளராகத் திகழும் நிகில் முருகனுக்கு 'தொடர்பு நாயகன்' எனப் பட்டம் சூட்டி கவுரவித்துள்ளது பிரபல பத்திரிகையான இந்தியா டுடே.

    தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்தான். குறிப்பாக கமல்ஹாசனுக்கு மீடியா மேனேஜரே நிகில்தான்.

    கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை தமிழ் சினிமா நாயகர்களின் எல்லைகளை விஸ்தரித்ததில் நிகிலுக்கு மிகப்பெரும் பங்குண்டு. சமீபத்தில் கூட உலகின் முன்னணி மீடியாக்களான டைம்ஸ் மற்றும் பிபிசிக்கு ஆன்லைனிலேயே ரஹ்மானின் பேட்டியை பெற்றுத் தந்தவர் நிகில்.

    கமல்ஹாசனின் படங்களுக்கு உலக அளவில் மீடியா வெளிச்சம் பரவுவதற்கான காரணங்களில் முக்கியமானது நிகிலின் பப்ளிசிட்டி பாணி.

    இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, சசிகுமார், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், சூர்யா, கார்த்தி தொடங்கி பல முதல் வரிசை நடிகர்கள் என அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவர் நிகில்.

    இவர்களில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டுமானாலும் மீடியாக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவுபவர் நிகில் முருகன்தான்.

    தன்னை அணுகுபவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும் வரை பொறுப்பாகவும் பொறுமையாகவும் உடனிருந்து உதவும் மனிதர் இவர். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் இவர் எப்போது தூங்குவார், எப்போது பணியிலிருப்பார் என்பதே தெரியாது மீடியாக்காரர்களுக்கு. அத்தனை சுறுசுறுப்பு. இவரது பிரஸ் மீட்டுக்கு வரும் சராசரி பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 300!

    தமிழ்ப் பட நிகழ்வுகளைப் பெரிதாக கண்டுகொள்ளாத பெரும்பாலான வடநாட்டு மீடியாக்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளின் நிருபர்களைக்கூட வரவழைத்துவிடுவார் நிகில்.

    தொடர்பு நாயகன் என்ற தலைப்பில் இவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரையில் இந்தியா டுடே இப்படி குறிப்பிட்டுள்ளது:

    "சினிமாதான் வாழ்க்கை என்ற முடிவோடு 20 வயதில் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்த நிகில் முருகன்தான் சினிமா பிஆர்ஓ தொழிலின் முகத்தை மாற்றியவர்.

    எக்ஸ்பிரஸ் வேகம், அதில் துல்லியம்... இவரது முத்திரை. லேப்டாப், டிஜி பென், டாக்குமெண்ட் ஸ்கேனர் மற்றும் சிடி ரைட்டருன் ஒரு நடமாடும் அலுவலகமாக மாறியுள்ளார். பிஆர்ஓ தொழிலை ஒரு கார்ப்பரேட் தொழிலாக மாற்ற வேண்டும் என்பது இவர் லட்சியம்..."

    தனக்கு கிடைத்துள்ள இந்தப் பெருமை குறித்து நிகில் முருகன் நம்மிடம் கூறியதாவது:

    மக்கள் தொடர்பு என்பது மிக முக்கியமான பணி. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல திட்டமிட்டு செய்யக்கூடிய தொழில். அதைச் சிறப்பாகச் செய்தாலே ஒரு படத்தின் வெற்றியில் பாதியை பெற்றுத் தந்துவிடலாம்.

    என்னைப் பொறுத்தவரை சின்ன பத்திரிகை, பெரிய பத்திரிகை, மீடியா என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லா பத்திரிகைகளிலும் நான் பணியாற்றும் படங்கள், நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும். இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவுமே இருக்கக் கூடாது, என்கிறார்.

    இந்த ஆண்டு வெளியான படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சிறப்புக்குரிய 'பசங்க' மற்றும் 'நாடோடி'களின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்தான்!

    விரைவில் வரவிருக்கும் எந்திரன் - தி ரோபோ, ராவணன் மற்றும் உன்னைப் போல் ஒருவனுக்கும் இவர்தான் பிஆர்ஓ!

    இந்தியா டுடேவின் இந்த பட்டியலில் ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினி கிராபிக்ஸ் நாயகி எனவும், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் பிரகாசிக்கும் முகம் எனவும், இயக்குநர் சசிக்குமார் சினிமா காதலர் எனவும் புகழப்பட்டுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X