»   »  செந்தில் மகன் திருமணம்

செந்தில் மகன் திருமணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Goundamani at Senthil son marriage
நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் திருமணம் மதுரையில் நடந்தது. செந்திலின் திரையுலக பார்ட்னர் கவுண்டமணி தலைமை தாங்கி கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

நகைச்சுவை நடிகர் செந்தில்-கலைச் செல்வி நாச்சியார் தம்பதியின் மகன் டாக்டர் மணிகண்ட பிரபுவுக்கும், மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் அரவிந்தகுமார்-உமையாள் தம்பதியின் மகள் டாக்டர் ஜனனி பிரியவந்திகாவுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது.

பி.டி.ஆர். திருமண மஹாலில் நடந்த கல்யாணத்தில், நடிகர் கவுண்டமணி கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் மதுரை ஆதினம், பாஜக எம்பி திருநாவுக்கரசர், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் அதிமுகவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil