கமல் பிறந்த நாள்: உடல் உறுப்பு தானம், நலத்திட்ட உதவிகளை செய்யும் ரசிகர்கள்

By Shankar

நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் விழாவை வருகிற 7-ந்தேதி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இதையொட்டி ஏழைகளுக்கு நிறைய நலத்திட்ட உதவிகளும் வழங்குகின்றனர். 7 ரசிகர்கள் உடல் உறுப்பு தான உறுதிமொழியை அளிக்கவுள்ளனர்.

இதுகுறித்து கமல் நற்பணி இயக்கப் பொறுப்பாளர் ஆர் தங்கவேலு விடுத்துள்ள அறிக்கையில், "பத்மஸ்ரீ கமல்ஹாஸன் பிறந்த நாளையொட்டி வருகிற 6-ந்தேதி காலை 8 மணிக்கு தென் சென்னை மாவட்ட கமல் நற்பணி இயக்கம் சார்பில் சாந்தோம் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் 100 பேருக்கு வேட்டி-சேலை மற்றும் உணவு வழங்கப்படுகிறது.

9 மணிக்கு சேத்துப்பட்டில் ரசிகர்கள் 100 பேர் ரத்ததானம் செய்கின்றனர். ராயபுரம் பி.எஸ்.என்.ஆர். மருத்துவமனைக்கு 25 கல்லூரி மாணவ-மாணவிகள், 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்கின்றனர். 7 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்து பத்திரங்களை வழங்குகிறார்கள். பெரம்பூரில் குழந்தைகள் காப்பகத்துக்கு மளிகை பொருட்கள் மற்றும் சீருடை, உணவு வழங்குகின்றனர்.

ஆழ்வார்பேட்டையில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்குகின்றனர். 7-ந்தேதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கமல் மன்றம் சார்பில், 50 ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடை, 50 பெண்களுக்கு புடவை வழங்கப்படுகிறது.

பாரிமுனை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம் 58 பேருக்கு வேட்டி- சேலைகள் வழங்கப்படுகின்றன," என்று கூறியுள்ளார்.

இந்த விழாக்களில் மாநில பொறுப்பாளர் ஆர். தங்கவேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X