twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருவள்ளுவராக ரஜினி?

    By Staff
    |

    Gibson and Cavaziel
    புனித தோமையார் படத்தில் திருவள்ளுவப் பாத்திரத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை கேட்டுள்ளனர்.

    ஏசுவின் சீடராக இருந்தவர் புனித தோமையார். இவர் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வேத சாட்சியாக உயிர்விட்டார். சென்னையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்தான் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

    உலகிலேயே இரண்டு தேவாலயங்கள்தான் ஏசுவின் சீடர்கள் கல்லறை மேல் கட்டப்பட்டுள்ளது. முதலாவது வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம். அடுத்து சாந்தோம்.

    புனித தோமையாரின் வாழ்க்கை வரலாறு ரூ.50 கோடி செலவில் திரைப்படமாக உருவாகிறது. ஆலிவுட் நடிகர்கள் நடிக்கும் இந்த படம் சென்னை-மயிலை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

    புனித தோமையாரில் ஏசுவாக நடிக்க மெல் கிப்சனின் பேஷன் ஆப்த கிரைஸ்ட்' (Passion of the Christ)) படத்தில் நடித்த ஆலிவுட் நடிகர் ஜேம்ஸ் கெவிசலை (James Caviezel) நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. தோமையார் வேடத்திலும் ஆலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தை அமெரிக்க, கனடா நடிகர்களிடம் நடந்து வருகிறது.

    ரஜினிக்கு அழைப்பு:

    தோமையார் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை போதித்து வந்த அதே கால கட்டத்திலேயே திருவள்ளுவரும் சென்னை மைலாப்பூரில் வாழ்ந்தார் என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தச் சம்பவமும் தோமையார் படத்தில் இடம் பெறுகிறது.

    திருவள்ளுவராக ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருத்து கூறப்பட்டது. எனவே, இந்த வேடத்தில் அவரை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து அவரிடம் பேச உயர்மட்ட பாதிரியார்கள் முயற்சித்து வருகின்றனர்.

    இது தவிர தமிழக சூழ்நிலையில் இடம் பெறும் காட்சிகளில் அஜீத், ஷாலினி மற்றும் பிரபல தமிழ் நடிகர்களை நடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு வாழ்ந்த இடம், தோமையார் மத போதனை செய்வதற்காக சென்ற நாடுகள், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் அவர் கால்பதித்த இடங்களை பழமை மாறாத சூழ்நிலையில் படமாக்க முடிவு செய்யப்படுகிறது. இதற்காக பிரமாண்ட செட்'கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

    புனித தோமையார் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது. தமிழ் மலையாளம், தெலுங்கு உள்பட பல மொழிகளில் இந்த படம்

    தயாரிக்கப்படுகிறது. தமிழகம் தவிர படத்தின் முக்கிய காட்சிகள் கேரளா மற்றும் வெளி நாடுகளில் நடை பெறுகிறது. படத்தின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் பால்ராஜ் லூர்து சாமி மற்றும் தயாரிப்பு குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X