twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் திரைப்படங்கள் மட்டும் பங்கேற்கும் நார்வே திரைப்பட விழா-2010!

    By Staff
    |

    Norway Tamil Film Festival 2010
    முழுக்க முழுக்க தமிழ்ப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் 'நார்வே தமிழ் திரைப்பட விழா 2010' பிப்ரவரி 6 முதல் 9-ம் தேதி வரை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடக்கிறது.

    இந்த விழாவில் சுப்பிரமணியபுரம், பூ, மாயாண்டிக் குடும்பத்தார், போராண்மை, யோகி, நாடோடிகள் உள்பட 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

    மிஷ்கின் இயக்கிய நந்தலாலா திரைப்படம் முதல் முறையாக இந்த விழாவில் கலந்து கொள்கிறது. வெளியுலகின் பார்வைக்கு இந்தப் படம் இப்போதுதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நான்கு நாட்கள் நடக்கும் இந்த திரைவிழாவில் பங்கேற்க தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களான, எஸ்.பி.ஜனநாதன், சசிக்குமார், மிஷ்கின் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

    தமிழ் திரைப்படத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோசர் பேர் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன், திரைப்பட இசையமைப்பாளர் விஎஸ் உதயா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் இந்த திரைவிழா நடக்கிறது.

    இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பவர் வசீகரன் சிவலிங்கம். நார்வே தமிழரான இவரது விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் விழாவை முன்னின்று நடத்துகிறது.

    இதுகுறித்து வசீகரன் சிவலிங்கம் கூறுகையில், "தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகிறது. ஒரு வருடத்திற்கு நூறு படங்கள் வெளிவரும் நிலையிலிறிந்து முன்னேறி, 2009-இல் 131 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    தமிழர்கள் வாழ்விலும், உலகத் தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாகக் கலந்து விட்ட தமிழ் சினிமா, உலகத்தின் விழித் திரைகளில் மெல்ல மலரத் தொடங்கி உள்ளது.

    தமிழ் சினிமா சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிக அளவில் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ஈரான் திரைப் படங்களுக்கு நிகராகவும், ஆங்கிலத் திரைப்படங்களின் தரங்களைத் தொடும் அளவிற்கு தொழில் நுட்பம் தமிழ் சினிமாவிலும் நிறைந்துள்ளது.

    இன்று தமிழ் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக திரைப்படங்கள்தான் என்ற நிலை உருவாகி உள்ளது. அதற்கு காரணம், தமிழ் படங்களின் உயர்ந்து வரும் தரம் மற்றும் மக்களின் வாழ்க்கை நெறி முறையில் அவைகள் ஆற்றும் முக்கிய பங்கு . தமிழ் சினிமாவின் வியாபாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் இருக்கிறார்கள்.

    இப்படியான ஒரு சூழலில் தரமான கதைகளை கொண்ட தமிழ்ப்படங்களை உலகத் திரையரங்குகளில் திரையிடுவதற்கான முன் முயற்சியாகவும், தமிழ்ப் படங்களை வேற்று நாட்டு இனத்தவர்கள் பார்த்து மகிழவும், நார்வேயில் முதல் முறையாக தமிழ் திரைப்பட விழா அரங்கேறுகிறது. உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக இது மாறும் என நம்புகின்றேன்.

    இத் திரைப்பட விழாவை நைர்வேயில் ஆரம்பித்து வைப்பதில், நார்வேயில் வாழ்கின்ற தமிழர்களான நாங்கள் பெருமை அடைகிறோம்.

    இத்திரைப்பட விழாவை முன் நின்று நடத்துவதில் வி.என்.மியூசிக் டிரீம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது.

    இந்த விழாவின் நிறைவு நாளான அன்று பார்வையாளர்கள் தேர்வு செய்கின்ற திரைப்படங்கள், நான்கு வகையான விருதுகளைப் பெறப்போகின்றன..." என்றார்.

    விழாவில் திரையிடப்படவுள்ள படங்கள்:

    பிப்ரவரி 6, 2010

    10.00 காலை - மாயாண்டி குடும்பத்தார்
    13.00 பிற்பகல் - பேராண்மை
    16.00 மாலை - அஞ்சாதே
    19.00 மாலை - பொக்கிஷம்
    21.40 இரவு - பூ

    பிப்ரவரி 7

    11.00 காலை - மீண்டும் (நார்வேயில் எடுக்கப்பட்ட திரைப்படம்)
    13.00 பிற்பகல் - ஈ
    16.00 மாலை - 1999 (கனடாவில் எடுக்கப்பட்ட திரைப்படம்)

    பிப்ரவரி 8

    13.00 பிற்பகல் - சுப்ரமணியபுரம்
    16.00 மாலை - யோகி
    19.00 மாலை - பசங்க
    21.40 இரவு - நாடோடிகள்

    பிப்ரவரி 9
    16.00 மாலை - நந்தலாலா

    திரையிடப்படும் இடம்: ஃபில்மென்ஷஸ் கினோ

    தொடர்புக்கு: வசீகரன் சிவலிங்கம், 0047 913 70 728

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X