»   »  ரஹ்மான் இசை பள்ளி: இடம் ரெடி

ரஹ்மான் இசை பள்ளி: இடம் ரெடி

Subscribe to Oneindia Tamil
AR Rahman
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சென்னை விமான நிலையம் அருகே இதற்கான இடத்தை வாங்கியுள்ளார் ரஹ்மான்.

சென்னையில் இளம் இசைப் பிரியர்களுக்கென தனியாக இசைப் பள்ளி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான். இதற்காக சென்னை விமான நிலையம் அருகே இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் இசைப் பள்ளிக்கான கட்டடங்கள் எழிலுற விரைவில் எழும்பவுள்ளன.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், சென்னை விமான நிலையத்திற்கு அருகே இடம் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கும்.

இசைப் பள்ளியைத் தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனது கனவு நனவாகப் போகிறது. இதில் சந்தோஷம்.

நமது நாட்டில் இளம் திறமையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் அவர்களுக்கு நல்ல புலமை உள்ளது. அதை மேம்படுத்த இந்தப் பள்ளி நல்ல பாலமாக அமையும்.

அவர்களின் திறமையை மேம்படுத்தவும், வெளிக் கொண்டு வரவும் இந்தப் பள்ளி உதவும்.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த இசைப் பள்ளியாக இது திகழும் என்றார் ரஹ்மான்.

ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பது குறித்த கேள்விக்கு ரஹ்மான் பதிலளிக்கையில், சிவாஜி படப் பாடல்கள் சாதனை படைத்தன. ரோபோட் படத்திற்காக வித்தியாசமான சப்தங்களை முயற்சிக்கப் போகிறேன். இப்படத்தில் இசை வித்தியாசமானதாக இருக்கும். ரஜினி படத்திற்கு இசையமைப்பது சந்தோஷமான விஷயம் என்றார் ரஹ்மான்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil