twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குரலைத் தேடி ஒரு வேட்டை!

    By Staff
    |

    Vijay TV - Super Singer 2008
    ஏர்டெல் சூப்பர் சிங்கர் -2006, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகிய போட்டிகளின் வெற்றியைத் தொடர்ந்து 2008ம் ஆண்டுக்கான சூப்பர் சிங்கர் போட்டிக்கு விஜய் டிவி தயாராகி விட்டது. இம்முறை சற்றே பெரிதாக திட்டமிட்டிருக்கிறது விஜய்.

    தமிழகத்தின் திறமையான குரலுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் ஏர் டெல் சூப்பர் சிங்கர் போட்டி சுற்றுப் போட்டிகள், நீக்கப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தேர்வாகும் குரல்கள் இறுதிப் போட்டிக்கு இறுதியாக முன்னேறும்.

    சென்னையில் உள்ளவர்களின் வசதிக்காக சென்னை நகரில் வீடியோ பூத்கள் அமைக்கப்ட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் இது அமைந்துள்ளது. இங்கு வந்து தங்களது குரலைநேயர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏர்டெல் சந்தாதாரர்கள் தங்களது மொபைல் போனிலிருந்து 543212727 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு குரலைப் பதியலாம்.

    ஜூன் 27ம் தேதி நடந்த ஆடிஷன் டெஸ்ட்டை தவற விட்டவர்களுக்கான கடைசி வாய்ப்புகள் இவை.

    இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது தங்களுக்குப் பிடித்த பாடகர், பாடகியருக்கு நேயர்கள் ஓட்டுப் போடலாம்.

    இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் தவிர அரிய வாய்ப்பாக, இசைஞானி இளையராஜாவின் புதல்வரான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு அளிக்கப்படும்.

    சென்னை ஆடிஷனுக்கு பிரபல பாடகர்களான சுனிதா சாரதி, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

    சென்னை மண்டலத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து அவர்களிலிருந்து 47 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையைப் போலவே கோவை, திருச்சியிலும் ஆடிஷன் முடிந்துள்ளது. கோவை மண்டலத்திற்கு பின்னணிப் பாடகிகள் எஸ்.பி. ஷைலஜாவும், ஸ்ரீலேகா பார்த்தசாரதியும் நடுவர்களாக இருந்தனர். திருச்சி மண்டலத்திற்கு மஹதியும், மாதங்கியும் நடுவர்களாக பணியாற்றினர்.

    இந்த இரு மண்டலங்களிலிருந்தும் தலா 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஜூலை 7ம் தேதி ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 போட்டி கோலாகலமாக தொடங்குகிறது. திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை இரவு 9 மணிக்கு இப்போட்டியை காணலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X