twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரத்னகுமாருக்கு வித்யாசாகர் பாராட்டு!

    By Staff
    |

    Lekha Rathnakumar with Vidhyasaagar
    முன்னணி இசையமைப்பாளரான வித்யாசாகர் லேகா சொனாட்டன் இசைப் பதிவுக் கூடத்தைப் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனியில் உள்ள சொனாட்டன் இசை நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதியாக பல ஆண்டுகள் இருந்து வருகிறார்.

    விளம்பரப் படத் தயாரிப்பு, திரைப்பட முயற்சி என ஒரு பக்கம் பரபரப்பாக இருந்தாலும், சர்வதேச தரத்திலான சொனாட்டன் இசையை இந்தியப் படங்களுக்கு வழங்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

    ஏற்கெனவே ஜெர்மனியில் உள்ள சொனாட்டன் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்ட வித வித மான இசைக் கோர்வையை, இங்கு தயாரிக்கப்படும் படங்களின் காட்சிகளுக்கேற்ப பின்னணி இசையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

    செலவும் குறைவு, நேரமும் மிச்சப்படும். சர்வதேசத் தரத்தில் இசையும் கிடைக்கும். ஒருமுறை பயன்படுத்திய இசையை மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. காரணம் வாரம்தோறும் புதுப்புது இசைக் கோர்வை வந்த வண்ணமிருக்கும்.

    இவற்றை எப்படி எங்கு வைத்துப் பதிவு செய்வது என யாரும் யோசிக்கவும் தேவையில்லை. அதற்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு ஸ்டுடியோவையும் உருவாக்கியுள்ளனர் லேகா ரத்னகுமாரும் சொனாட்டன் நிறுவனமும்.

    இந்த ஸ்டுடியோவில்தான் கே.பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் புதிய வார்ப்புகள் படத்துக்கு முழுவதும் சொனாட்டன் இசைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் லேகா ரத்னகுமாரின் ஸ்டுடியோவிலேயே பின்னணி இசை சேர்க்கப்பட்டது.

    மகேந்திரன், லிங்குசாமி ஆர்வம்

    பின்னணி இசையின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு ஆகும் செலவு இரண்டையும் நன்கு உணர்ந்த இயக்குநர் மகேந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கவுள்ள புதிய படத்துக்கு இந்த லேகா சொனாட்டான் ஸ்டுடியோவைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார். சமீபத்தில் அவரும் இது குறித்து விசாரித்து விட்டுச் சென்றுள்ளார்.

    முன்னணி இயக்குநர் லிங்குசாமியும் இதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

    இந்த ஸ்டுடியோ மற்றும் இங்குள்ள இசைத் தொகுப்புகள் குறித்து கேள்விப்பட்ட பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் சில தினங்களுக்கு முன் லேகா சொனாட்டான் ஸ்டியோவுக்கு வந்தார்.

    ஸ்டுடியோவையும், இசைத் தொகுப்புகளையும் பார்வையிட்ட அவர், இது ஒரு மிகச்சிறந்த முயற்சி என்றும், தமிழ் சினிமாவுக்கு உண்மையிலேயே பயனுள்ள பணியை லேகா சொனாட்டன் செய்திருப்பதாகவும் பாராட்டுள்ளார். வரும் நாட்களில் இந்த ஸ்டுடியோவில் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் பின்னணி இசைக் கோர்ப்பு வேலை நடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    'இந்த ஸ்டுடியோவை நானும் எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வேன்' என்று அவர் கூறியதாக தெரிவிக்கிறார் லேகா ரத்னகுமார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X