»   »  கமல் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத்

கமல் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத்

Subscribe to Oneindia Tamil
Devi Sri Prasad with Isha
தெலுங்கு இசைப் புயல் தேவிஸ்ரீபிரசாத்தின் நீண்ட நாள் கனவு ஒரு வழியாக நனவாகியுள்ளது. கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் பின்னணி இசையை அவர்தான் அமைத்து வருகிறாராம்.

தெலுங்கில் பாப்புலரான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் அவரது கனவெல்லாம் கமல் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பதுதான். அது கை கூடாமலேயே இருந்தது. இப்போது அந்தக் கனவு ஒரு வழியாக நனவாகியுள்ளது.

தசாவதாரம் படத்தின் பின்னணி இசையை கவனிக்கும் பொறுப்பு பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு முதலில் இசைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இந்தி இசைப் புயல் ஹிமேஷ் ரேமஷய்யாதான். பாடல்களைப் போட்டுக் கொடுத்து விட்ட அவர் திடீரென இந்தியில் நடிக்கப் போய் விட்டார். இதனால் பின்னணி இசைக்கு வேறு ஒருவரைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானை பின்னணி இசைக்கு மட்டும் கூப்பிடலாமா என முதலில் யோசிக்கப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டு தேவி ஸ்ரீபிரசாத் பின்னணி இசைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

பின்னணி இசையோடு, இதுவரை ஹிமேஷ் இசையமைத்த அனைத்துப் பாடல்களையும் டிஜிட்டல் மயமாக்கும் பணியும் பிரசாத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். பரம சந்தோஷத்தோடு வேலையைத் தொடங்கியுள்ளார் பிரசாத்.

தற்போது பிரசாத் கைவசம், சந்தோஷ் சுப்ரமணியம், கந்தசாமி, விஜய் - பிரபு தேவா இணையவுள்ள புதுப்படம் ஆகியவை உள்ளன.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil