»   »  விஜய் படத்தில் நயனதாரா?

விஜய் படத்தில் நயனதாரா?

Subscribe to Oneindia Tamil
Nayanatara with Vijay
நளின மங்கை நயனதாரா அடுத்து விஜய்யுடன் ஜோடி சேரப் போவதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏவி.எம். பாலசுப்ரமணியம் தயாரிக்கிறார்.

ஏவி.எம். பாலசுப்ரமணியம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் விஜய் நடிக்கவுள்ளார். ஏவி.எம். குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் பாலசுப்ரமணியம் தயாரிக்கும் முதல் படம் இது.

இப்படத்தை ஹரி இயக்கவுள்ளார். அவருடைய கால்ஷீட்டை வாங்குமாறு விஜய் கூறியதைத் தொடர்ந்து ஹரியின் கால்ஷீட்டை பாலசுப்ரமணியம் வாங்கியுள்ளாராம்.

தற்போது பரத்தை வைத்து இயக்கி வரும் செவ்வேல் படத்தை முடித்த பின்னர் விஜய் படத்துக்கு வருகிறார் ஹரி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிவகாசி படத்தில் ஒரு பாட்டுக்கு விஜய்யுடன் ஆடியிருந்தார் நயனதாரா. தற்போது முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேரப் போகிறார்.

ஏற்கனவே குருவி படத்திலேயே விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்திருக்க வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் திரிஷா குறுக்கே புகுந்து விடவே அந்த வாய்ப்பு நழுவியது.

நயனாராதான் இந்தக் கதைக்குப் பொருத்தமானவராக இருப்பார் என இயக்குநர் ஹரி கருதுகிறாராம்.

பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படத்தில் நடிக்கப் போவது யார் யார் என்பது தெரிய வரும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil