twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாடு தழுவிய ஸ்டிரைக்-பெப்ஸி எச்சரிக்கை

    By Staff
    |

    Vijay
    சென்னை: இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தி, போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்வரை திரைப்படத் துறை தொடர் போராட்டத்தில் ஈடுபடும். தேவைப்பட்டால் இந்தியா முழுவதிலும் உள்ள திரைப்பட சங்களங்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டத்தில் இறங்குவோம் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்ஸி) அறிவித்துள்ளது.

    இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் ஃபெப்ஸி சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் பெப்சி அமைப்பைச் சேர்ந்த 24 சங்கத்திலிருந்து 10,000 பேர் கலந்து கொண்டனர்.

    சென்னை வடபழனி அருணாச்சலம் சாலையில் உள்ள மைதானத்தில் 15,000 பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டிருந்தது. பெப்சி மற்றும் முக்கிய திரைப்பட சங்க நிர்வாகிகள் அமரும் வகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தொடங்கி வைத்தார். பெப்சி அமைப்பின் தலைவர் விஜயன் தலைமை வகித்தார். போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் பேசியவர்கள் பலரும் இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த மத்திய அரசு நடவடிக¢கை எடுக்க வேண்டும், இலங்கைக்கு ராணுவ உதவியையும் நிறுத்த வேண்டும், தனி தமிழ¦ழம்தான் இப்பிரசச்னைக்கு தீர்வு என பேசினர்.

    நடிகர் விஜய் பேசும்போது, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு தந்தி அனுப்புமாறு ரசிகர்களை கேட்டிருந்தேன். இரண்டு நாளில் 30,000 தந்திகளை அனுப்பியுள்ளனர். இது போதாது. பல லட்சம் தந்தி அனுப்ப வேண்டும் என்றார்.

    பெப்ஸி தலைவர் விஜயன் பேசுகையில், போர் நிறுத்தம் நடக்காவிட்டால் இந்தியா முழுவதும் ஷூட்டிங்கை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம், என்றார்.

    நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, ஸ்ரீமன், ரமேஷ் கண்ணா, ஜெய்ஆகாஷ், மயில்சாமி, சார்லி, இளவரசு, இயக்குனர்கள் பி.வாசு, செல்வமணி, ஆர்.கே. சக்தி, தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், பெப்சி அமைப்பு செயலாளர் உமாஷங்கர் பாபு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    பெப்ஸி தொழிலாளர்களின் குடும்பத்தினரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X