twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    17000 பேர் பங்கேற்பு... விடிய விடிய நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

    By Shankar
    |

    Chiranjeevi, Junior NTR and Lakshmi Pranathi
    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - லட்சுமி பிரணதி திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தது. நேற்று மாலை 7 மணிக்கு துவங்கிய இந்த திருமணம், இன்று விடிய விடிய நடந்தது.

    அதிகாலை 2.41 மணிக்கு மணமகளுக்கு தாலி கட்டினார்.

    ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்டிஆரின் பேரன் ஜூனியர் என்டிஆர். இவருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    ஜூனியர் என்.டி.ஆர். -லட்சுமி பிரணதி திருமணம் இன்று அதிகாலை 2.41 மணிக்கு நடந்தது. திருமணத்துக்கான ஹைதராபாத் அருகே உள்ள மாதா பூரில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    ரூ 22 கோடி செலவில் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நடிகர்-நடிகைகள் பலர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

    திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மெகா விருந்து பரிமாறப்பட்டது. இன்று அதிகாலை முகூர்த்த சடங்கு துவங்கின. ஜூனியர் என்.டி.ஆர். சந்தன கலரில் பட்டு வேட்டி -சட்டை அணிந்து இருந்தார். லட்சுமி பிரணதி அதே நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த பட்டுச்சேலை அணிந்து இருந்தார்.

    முதலில் மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் முகூர்த்தத்துக்காக தங்கம் இழைக்கப்பட்ட மண மேடையில் ஜூனியர் என்.டி.ஆர் அமர்ந்தார். அவர் அருகில் லட்சுமி பிரணதியை அழைத்து வந்து அமர வைத்தனர். ஜூனியர் என்.டி.ஆர். எழுந்து நின்று லட்சுமி பிரணதிக்கு தாலி கட்டினார்.

    அப்போது கூடி இருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

    திருமணத்தில் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர் கள், ரசிகர்கள் உள்பட 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். விடிய விடிய விருந்து பரிமாறப்பட்டது. இன்று காலையிலும் விருந்து தொடர்ந்தது. ரசிகர்கள் பலரும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்.

    English summary
    Popular Telugu film actor Junior NTR Thursday night tied the knot with Lakshmi Pranathi, a relative of former Andhra Pradesh chief minister N. Chandrababu Naidu. Politicians of all parties and the film personalities greeted the couple at the grand reception at 'Hitex' here. The marriage ceremony will take place at 2.41 a.m., the auspicious time set by the priests.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X