twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட் வரும் ஹாலிவுட் 'சவுண்ட் பார்ட்டி'!

    By Staff
    |

    Kunal Raja
    பொதுவாக கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்குப் பறக்கத்தான் திரைக் கலைஞர்கள் விரும்புவார்கள். ஆனால் குணால் ராஜன் கொஞ்சம் வித்தியாசமானவர்தான்.

    இவர் ஹாலிவுட்டிலிருந்து தமிழ் திரைப்பட உலகுக்கு வர ப்ரியப்படுகிறார்.

    குணால் ராஜன்?

    இருப்பது அமெரிக்கா என்றாலும் புதுவை சாந்தி நகர்தான் இவருக்குப் பூர்வீகம். வயசு அப்படியொன்றும் அதிகமும் இல்லை. ஜஸ்ட் 24தான். கட்டை பிரம்மச்சாரி... ஆனால் இவரது சாதனையோ, சக தமிழனை வாய்பிளக்கச் செய்கிறது.

    சவுண்ட் எஞ்ஜினீயரிங் துறையில் ஹாலிவுட்டின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருக்கு சொந்தமாக பிளாக் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற பெரிய ஸ்டுடியோ ஹாலிவுட்டில் உள்ளது.

    இங்குதான் இந்தி கஜினிக்கு சவுண்ட் டிசைன் செய்தார் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி. அதுமட்டுமல்ல, இங்கு அவருக்குக் கீழ் பணியாற்றும் கலைஞர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் கிராமி போன்ற விருதுகளை வென்றவர்களாக இருக்கிறார்கள்.

    அண்மையில் வெளியாகி ஹிட் ஆகியிருக்கும் 'லெய்ட் டு ரெஸ்ட்' எனும் ஹாலிவுட் படத்துக்கு குணால்தான் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றியுள்ளார்.

    இந்தப் படத்தில் இவரது அசாத்திய திறமையைப் பார்த்த பிறகு பிரபலமான ஹாலிவுட் இயக்குநர்களில் பெரும்பாலானோர் குணாலைத் தேடி வர, இவரோ நல்ல தரமான சில தமிழ்ப் படங்களுக்கு சவுண்ட் டிசைனிங் செய்ய வேண்டும் என இங்குள்ள இயக்குநர்களை நாடுகிறார்.

    இப்போதைக்கு, வெளிவரும் முன்பே சர்வதேச விருதுகளை வென்றுள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு சவுண்ட் டிசைனராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பல நாட்கள் குணாலுடன் தங்கியிருந்து அவரது சவுண்ட் மிக்ஸிங் மற்றும் டிசைனிங் பணிகளைப் பார்த்து வியந்துள்ளார்.

    அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்காக இதுவரை எந்த தமிழ்ப் படத்திலும் பார்த்திராத புதிய பாணி ஒலி அமைப்பைக் கொடுத்துள்ளாராம் குணால்.

    இதைத்தவிர இயக்குநர் லேகா ரத்னகுமார் ஹாலிவுட்டில் படமாக்கவிருக்கும் புதிய படத்துக்கும் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றவிருக்கிறார்.

    "என்னதான் வெளிநாட்டில் பல விருதுகளைப் பெற்றாலும், நமது கலைஞர்களுடன் பணியாற்றுவதில் தனி திருப்தி உள்ளது. எனக்கு கமல் சார், மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும், அவர்களது படைப்புகள் மேம்பட என்னாலான பங்களிப்பைத் தரவேண்டும் என ஆசையாக உள்ளது.

    குறிப்பாக புதுமைகளை எங்கிருந்தாலும் தேடித் தேடி தன் படங்களில் வைக்கும் கலைஞானியின் படங்களுக்கு எனது பாணி சவுண்ட் டிசைனிங்கைத் தரவேண்டும் என்பது தீராத விருப்பம், எப்போது அந்த விருப்பம் நிறைவேறும் என்று தெரியவில்லை, என்றார் குணால் நம்மிடம்.

    கவலைப்படாதீங்க... 'கமல் சாரி'டமிருந்து நிச்சயம் உங்களுக்கு அழைப்பு வரும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X