»   »  ரஜினி படத்தில் மீண்டும் மீனா!

ரஜினி படத்தில் மீண்டும் மீனா!

Subscribe to Oneindia Tamil
Meena
ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, குசேலன் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி படத்தில் மீனா நடிக்கிறார்.

ரஜினிகாந்த் நடிக்கும் குசேலன் படத்தில் இன்னொரு நாயகனாக பசுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிம்ரன், தபு என பலரையும் அலசி கடைசியில் தற்போது மீனாவுடன் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

குசேலன் படத்தின் மலையாள ஒரிஜனலான கத பறயும் போள் படத்தில் 2வது நாயகனாக நடித்த சீனிவாசனுக்கு ஜோடியாக, 3 குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார் மீனா.

எனவே தமிழிலும் அவரே நடிக்கலாம் என நாம் முதலில் கூறியிருந்தோம். இடையில் சிம்ரன், தபு என சிலர் குறுக்கிட்டாலும் கூட இப்போது மீனாவையே புக் செய்துள்ளனராம்.

சிம்ரன் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டதால் அவரை விட்டு விட்டு தபுவிடம் சென்றனர். ஆனால் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்குப் பிறகு அவர் தமிழை கண்டுகொள்வதில்லை என்பதால் அவர் கிடைக்கவில்லை.

இதனால் மீனாவிடம் சரணடைந்து அவரையே ஒப்பந்தம் செய்து விட்டாராம் வாசு.

இதற்கு முக்கிய காரணம் ரஜினிதானாம். அவர்தான் பேசாமல் மீனாவையே ஒப்பந்தம் செய்து விடுமாறு கூறினாரம். இதனால்தான் மீண்டும் மீனா ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை கூடியதாம்.

கத பறயும் போள் படத்தில் மீனாவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டதும் இதற்கு இன்னொரு காரணம். எனவே வேறு யாரையும் நினைக்க முடியாத அளவுக்கு மீனா குசேலன் குழுவினரை ஆக்கிரமித்து விட்டார்.

ஏற்கனவே மீனா வீரா, எஜமான், முத்து ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினி படத்தில் நடிக்கவுள்ளார்.

ஜோடியாக நடிக்காவிட்டாலும் கூட ரஜினி படத்தில் இடம்பெறவிருப்பது மீனாவையும் குஷியில் ஆழ்த்தியுள்ளதாம். தமிழ் சினிமாவில் குசேலன் மூலம் தனக்கு பெரிய பிரேக் கிடைக்கும் என்ற சந்தோஷமும் அதற்கு காரணம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil