twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்துக்களை புண்படுத்தும் காட்சிகள் இல்லை: ஆஸ்கர்

    By Staff
    |

    Kamal Hassan
    இந்துக்களை புண்படுத்தும் எந்தவொரு காட்சியும் 'தசாவதாரம்' படத்தி்ல் இடம் பெறவில்லை என்று அந்த படத்தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

    ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கனவுத் தயாரிப்பான தசாவதாரத்தி்ல் இந்துக்களை புண்படுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்தக் காட்சிகளை அகற்றாவிட்டால் படத்தை திரையிட அனுமதிக்கப் போவதில்லை என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    தசாவதாரம் டிரெய்லர் காட்சியில் இடம்பெற்ற சில காட்சிகளை வைத்து இந்து அமைப்புகள் இவ்வாறு கொந்தளித்தன.

    ராமானுஜர், மற்றும் கடலில் கடவுள் சிலைகளைக் கரைப்பது தொடர்பான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்துமுன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

    ரூ.70 கோடி செலவில் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தசாவதாரம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 10 வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

    படம் சூப்பர் ஹிட்டாகும் என்று ரவிச்சந்திரன் எதிர்பார்த்துள்ள நிலையில் இப்படிப்பட்ட சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில்,

    ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளேன். கடவுள், ஆன்மிகம் இரண்டையும் பற்றிய ஆழமாக அலசப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை உடையவர்கள் இந்தப் படத்தை நிச்சயமாகப் பாராட்டுவார்கள்.

    பார்க்காமலே படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு சரியானதல்ல.
    முதலில் படத்தைப் பாருங்கள். மத உணர்வுகளுக்கு எதிரான விஷயங்கள் இருப்பதாக கண்டுபிடித்து கூறினால், நிச்சயம் அந்த கருத்துக்குத் தலைவணங்குவேன் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X