»   »  தனுஷுடன் இணையும் திரிஷா

தனுஷுடன் இணையும் திரிஷா

Subscribe to Oneindia Tamil
Trisha
இந்தியில் ஹிட் ஆன ஜப் வி மெட் படம் தமிழுக்கு ரீமேக் ஆகி வருகிறது. இதில் தனுஷுடன், திரிஷா ஜோடி போடவுள்ளாராம்.

பாலிவுட் பழங்காதலர்கள் ஷாஹித் கபூர், கரீனா கபூர் இணைந்து நடித்த கடைசிப் படம் ஜப் வி மெட். இந்தப் படத்தோடு அவர்களது காதலும் கரைந்து போய் விட்டது. இப்போது சைப் அலிகானுடன் காதலில் இருக்கிறார் கரீனா.

பெரும் ஹிட் ஆன ஜப் வி மெட் படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் தனுஷும், திரிஷாவும் இணைந்து நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

இருவரும் இணையும் முதல் படம் இதுவாக இருக்கும். ஜப் வி மெட் படத்தின் விநியோகஸ்தர்களான ஸ்ரீ அஷ்டவிநாயக் சினிவிஷன் நிறுவம்தான் இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் மோசர் பெயர் நிறுவனத்துடன் இணைந்து ரீமேக் செய்யவுள்ளது.

தமிழில் கார்த்தி,மாதவன், வினய் என பலரையும் அணுகி கடைசியில் தனுஷை ஒப்பந்தம் செய்துள்ளனராம். திரிஷாவிடம் இப்போது கால்ஷீட் கேட்டு போனபோது தயக்கம் இல்லாமல் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

இதையடுத்து நல்ல இயக்குநரைப் பிடித்துப் போட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் முழு விவரத்தையும் வெளியிடவுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil