»   »  'வெள்ளித்திரை' ரஜினி கதையா?

'வெள்ளித்திரை' ரஜினி கதையா?

Subscribe to Oneindia Tamil
Prakash Raj
ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெள்ளித்திரை திரைப்படத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு என்கிறார் அப்படத்தின் இயக்குநர் விஜி.

பிரகாஷ் ராஜின் டூயட் மூவிசும் மோசர் பேயர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பிரமாண்ட படம் வெள்ளி திரை. வெளி வரும் முன்பே ஏக எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ள படம் இது. மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான உதயனனு தாரம் படதின் தமிழ்ப் பதிப்பு இப்படம். ரஜினி நடிக்கப் போகும் குசேலன் படத்தின் கதைக்குச் சொந்தக்காரரான சீனிவாசன்தான் இப்படத்துக்கும் கதாசிரியர்.

18 ஆண்டுகள் திரையுலகில் மிகுந்த கஷ்டப்பட்ட ஒரு நடிகன், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டிப் பிடிப்பதுதான் படத்தின் மையக் கரு.

இந்தப் படம் கிட்டத்தட்ட ரஜினியின் சொந்த வாழ்க்கையின் சில அத்தியாயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதைடுத்து பல விதமான கருத்துகள் கோடம்பாக்கத்தில் பரவி வருகின்றன.

ரஜினியின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரகாஷ்ராஜ் எப்படி படம் தயாரித்து நடிக்கலாம் என்று ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநரான விஜியிடம் இது குறித்துக் கேட்டோம். அவர் கூறுகையில், இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ஒருவரது திரையுலக வாழ்க்கையைச் சொல்லும் படம்தான். ஆனால் ரஜினி சாரின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தை எடுக்கவில்லை. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்தான் இது.

நாங்களாக எதையும் திணிக்கவில்லை. மூலப்படத்தின் தன்மை மாறாமல் கொடுத்திருக்கிறோம். அதே நேரம் திரையுலக நடவடிக்கைகளையும் லேசாக விமர்சனம் செய்வது போலத்தான் இப்படம் அமைந்துள்ளது.

டாக்டர்களையும் அரசையும் கடுமையாக செய்யும் ஊடகமான சினிமாவில், அதே துறையை விமர்சித்து படமெடுப்பது தவறா... என்றார். ரொம்ப வாஸ்தவமான பேச்சுதான்.

பிரகாஷ் ராஜ் தவிர, பிருத்விராஜ் மற்றும் கோபிகா நடித்திருக்கும் வெள்ளித்திரை ஏப்ரல் 22-ம் தேதி திரைக்கு வருகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil