twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆந்திர மக்களுக்கு கஷ்டமென்றால் முதல் ஆளாய் வருவேன்! - ரஜினி

    |

    Rajni
    ஆந்திர மக்களுக்கு ஒரு கஷ்டமென்றால் முதல் ஆளாக நிற்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    கடந்த மாதம் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த பெருமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையிழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர்.

    வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களால் ஆன நிவாரணத் தொகையினை மாநில அரசிடம் வழங்கி வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில திரைத்துறையினர் நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் வசூலாகும் தொகையினை வெள்ள நிவாரண நிதிக்குத் தருவதாக முடிவெடுத்தனர். இதற்கு தமிழகம், கர்நாடகம் போன்ற அண்டை மாநில திரைத்துறையினரின் பங்களிப்பையும் கோரியிருந்தனர்.

    இதனை ஏற்று தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் ஆந்திர மக்களின் துயர் துடைக்க தங்கள் பங்களிப்பை நிதியாகவும் வழங்கினர்.

    நேற்று சனிக்கிழமை மாலை ஹைதராபாத் கச்சிபவுலி ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் ரஜினி பேசியது:

    "அனைவருக்கும் வணக்கம். சில தினங்களுக்கு முன் நான் மெட்ராஸ்ல இருந்தப்போ, தாசரி நாராயணராவ் எனக்கு போன் செய்து 'இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி இருக்கு, தெலுங்கு மக்கள் மீது உங்களுக்கு தனிப் பாசம் உண்டுடென்று தெரியும். அது எல்லாருக்கும் தெரிய வேண்டுமில்லையா… அதனால நீங்கள் கண்டிப்பாக இந்த கலை நிகழ்ச்சிக்கு வந்து ஒரு 10 நிமிடமாவது இருக்க வேண்டும்…" என்று கூறிவிட்டு டக்கென்று போனை வைத்து விட்டார்.

    நான் வர்றேனா, இல்லையான்னு கூட எதுவும் கேட்கல. போனை வச்சிட்டார். இதோ… நான் வந்துவிட்டேன். ஆந்திர மக்களுக்கு ஒரு கஷ்டமென்றால் முதல் ஆளாக நான் ஓடி வருவேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்துக் கொள்வேன்" என்றார் ரஜினி தெலுங்கில்.

    விழாவுக்கு வந்த முன்வரிசை பார்வையாளர்கள் அதிகபட்ச கட்டணமாக ரூ 1 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தனர்.

    பிரபல இயக்குநரும் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவ் தொகுத்து வழங்கினார்.

    ஸ்ரேயா, ப்ரியாமணி உள்ளிட்டோர் குத்தாட்டம் போட்டனர். கூடவே, முன்னாள் நடிகை சுகாசினியும் மேடையேறி, இளம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் சேர்ந்து தெலுங்கு கந்தசாமியில் இடம் பெற்ற எக்ஸ்கியூஸ் மீ மல்லன்னா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X