»   »  ஏவி.எம்மின் சரவணா ஸ்டோர்ஸ்!

ஏவி.எம்மின் சரவணா ஸ்டோர்ஸ்!

Subscribe to Oneindia Tamil
AVM Studio
சென்னை சாலிகிராமத்தில் கடந்த 65 ஆண்டுகளாக முக்கிய அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஏவி.எம் ஸ்டுடியோ வளாகத்தில் மிகப் பெரிய ஷாப்பிங் மால் உருவாகிக் கொண்டிருக்கிறது. சென்னை நகரின் மிகப் பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனமும் தனது பிரமாண்ட கிளையை இங்கு பரப்பி வருகிறது.

பெரும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள ஏவி.எம். நிறுவனம் தனது ஸ்டுடியோ வளாகத்தை படிப்படியாக உருமாற்றி வருகிறது. இரும்புத் திரை போடப்பட்ட பல பகுதிகளை வெளி உலகுக்குத் திறந்து விட முடிவு செய்துள்ளது ஏவி.எம். அடுத்த ஆண்டு முதல் இரும்புத் திரை ஸ்டுடியோவான ஏவி.எம். அனைவரும் செல்லக் கூடிய ஓபன் ஸ்டுடியோவாக மாறி விடும் என்கிறார்கள்.

இங்குள்ள பல பகுதிகள், அதாவது செட் கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்டன. சம்சாரம் அது மின்சாரம் படம் உருவான செட், வி.சேகரின் பல படங்கள் உருவான செட் ஆகியவை சமீபத்தில் இடித்துத் தள்ளப்பட்டன. அங்கு ஷாப்பிங் வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

இந்த இடத்தில்தான் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தனது பிரமாண்டமான கிளையை நிறுவப் போகிறதாம்.

அதேபோல, ரஜினி பிள்ளையார் கோவில் அருகே உள்ள காலி இடத்தையும் கூட வர்த்தக ரீதியில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம் ஏவி.எம். அங்கு அபார்ட்மெண்ட்டுகள் கட்டி விற்கவும் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil