»   »  'தீயவன்' சிம்பு!

'தீயவன்' சிம்பு!

Subscribe to Oneindia Tamil
Theeyavan movie still
புதுமுகங்கள் உதய், ஸ்ரீரஞ்சன் ஆகியோர் நடிக்கும் தீயவன் படத்தில் சிம்பு பாடுகிறாராம்.

இவர்களில் ஸ்ரீரஞ்சன், படத் தயாரிப்பாளரின் மகனாம். படத்தில் ராதாரவியும், நிழல்கள் ரவியும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி, கணேஷ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று படத்தில் சிம்பு பாடுகிறாராம்.

சிம்புவும், கணேஷும் பால்ய நண்பர்களாம். நண்பா, எனக்காக ஒரு பாட்டு என்று கணேஷ் கேட்டபோது, மறுக்க முடியவில்லையாம் சிம்புவால்.

இப்படம் ஒரு ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட். கதிர் இயக்குகிறார். ஈஸ்வர் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

சிம்பு வேறொருவர் படத்துக்குப் பாடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு படத்தில் சிம்பு பாடியுள்ளார். முன்பு விஜய் இதேபோலத்தான் படத்துக்கு ஒரு பாடல் என பாடிக் கலக்கி வந்தார். இப்போது அதை நிறுத்தி விட்டார். விஜய் பாணியில் சிம்புவும் அவ்வப்போது பாடல் பாடி ரசிகர்களை கலக்க ஆரம்பித்துள்ளார்.

தீயவன் சரி, கெட்டவன் படம் என்னாச்சு, எப்போது மறுபடியும் வளரும் என்பதை சிம்பு தரப்பு இன்னும் கமுக்கமாகவே வைத்துள்ளது. இப்போது தயாரிப்பில் இருந்து வரும் சிலம்பாட்டம் படத்தை தனது காளை பட சறுக்கலை சமாளிக்கும் ஏணியாக பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார் சிம்பு.

இதனால் படம் முழுக்க தனது திறமையை கொட்டி நடித்து வருகிறாராம். படத்தில் முக்கிய அம்சமாக குழந்தைகளையும் கவரும் பல அம்சங்களை அம்சமாக வைத்துள்ளாராம் இயக்குநர் - ஒளிப்பதிவாளர் சரவணன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil