twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெகா டிவியில் கீர்த்தி, சீர்காழி!

    By Staff
    |

    Keerthi Chawla in Mega TV - Azhagin Osai
    வரும் ஆகட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை யொட்டி இதுவரை இல்லாத பல புதிய சிறப்பு நிகழ்ச்சிகளை காலை முதல் மாலை வரை நேயர்கள் எல்லோரும் ரசிக்கும்படி சுவாரசியமாக மெகா டிவி ஒளிபரப்ப உள்ளது.

    காலை 6 மணிக்கு - டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் வழங்கும் சிறப்பு மங்கள இசை.

    காலை 8 மணிக்கு - காலத்தால் அழியாத நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தேனிசை பாடல்களின் இனிய தொகுப்பாக சிறப்பு அமுதகானம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    காலை 9 மணிக்கு - சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமண்ய சிவா கடைசிக் காலத்தில் வாழ்ந்த இடத்தைப் பற்றி இதுவரை பலருக்கு தெரியாத அரிய தகவல்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    காலை 10 மணிக்கு - சுதந்திரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்த தமிழக வீரத் தியாகிகளின் வரலாற்றினை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணரும் விதமாக நெஞ்சில் நின்றவர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    காலை 10.30 மணிக்கு - நேதாஜியின் இந்திய தேசிய ராணூவ படையில் பணியாற்றியவர்கள் நேதாஜி பற்றியும், தங்களது அனுபவங்கள் பற்றியும், நினைவலைகளாக நேயர்களிடையே உணர்வுப் பூர்வமாக பகிர்ந்து கொள்கின்றனர் - நேதாஜியின் படை நிகழ்ச்சியில்.

    காலை 11 மணிக்கு - பெண்களுக்காக பெண்களை உற்சாகப் படுத்தி ஊக்குவிக்கும் உன்னால் முடியும் பெண்ணே நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஸ்த்ரீ சக்தி புரஸ் கார் விருது பெற்ற சக்திமசாலா நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி தாம் கடந்து வந்த பாதையை நேயர்களிடையே உணர்வுப் பூர்வமாக பகிர்ந்து கொள்கிறார்.

    பகல் 12 மணிக்கு - பள்ளியில் பயில்கின்ற மாணவர்களிடையே உள்ள தேசப்பற்று உணர்வினை பறைசாற்றும் விதமாக அவர்களின் சுதந்திர உணர்வுகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளும் ஓர் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி புதிய மன்னர்கள் ஒளிபரப்பாகிறது.

    மதியம் 1 மணிக்கு - சுப்பிரமணியபுரத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் நடிகர் ஜெய் தமது அனுபவங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுப்பிரமணியபுரத்தில் இருந்து ஜெய் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    மதியம் 2 மணிக்கு - ஐ லவ் இந்தியா சிறப்பு மெகா லைவ் ஷோ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    மாலை 3 மணிக்கு - ப்ரணவம் இக்குழுவினரின் இன்னிசை மழை பொழியும் மயக்கும் மாலைப் பொழுது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    மாலை 4 மணிக்கு - தீம் தரிகிட தீனா இசையமைப்பாளர் தீனாவுடன் ஓர் இனிமையான சந்திப்பு ஒளிபரப்பாகிறது.

    மாலை 5 மணிக்கு - சுதந்திரத்திற்காக பங்காற்றிய திரைத்துறை, நாடகத் துறை கலைத் துறை குறித்து எடுத்துரைக்கும் கலையும் சுதந்திரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    மாலை 6.30 மணிக்கு - அழகின் ஓசை - நடிகை கீர்த்தி சாவ்லா உடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

    இரவு 7.30 மணிக்கு - இசைத் துறையில் தமது அனுபவங்கள் குறித்து நேயர்களிடையே பகிர்ந்து கொள்கிறர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நானும் இசையும் என்ற நிகழ்ச்சியில்

    இரவு 8 மணணிக்கு - மக்கள் அடுத்த பிறவியில் யாராக பிறக்க வேண்டும் என்ற தங்களது கனவுகளையும், ஆசைகளையும் சுதந்திரமாக நேயர்களிடையே பகிர்ந்து கொள்ளும் சுதந்திர ஆசைகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    இரவு 9.30 மணிக்கு - திரையுலகை மீண்டும் 1980-க்கு கொண்டு சென்ற இயக்குநர் சசிக்குமார் தமது அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் 1980-ல் சசி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    இரவு 10 மணிக்கு - நாம் அறிந்தும் அறிந்திடாத ஆச்சரிய மூட்டும் அரிய பல தகவல்களை அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுயுடன் கூறி சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் நிகழ்ச்சி சிரிப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X