பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஸ்வேதா திவாரி வெற்றி- ரூ. 1 கோடி பரிசு

By Sudha

Shweta Tiwari
பிக் பாஸ்-4 ரியாலிட்டி ஷோவில் டிவி நடிகை ஸ்வேதா திவாரி வெற்றி பெற்றார். அவருக்கு ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது.

கடந்த 14 வாரங்களாக அவர் உள்ளிட்ட போட்டியாளர்கள் புனே அருகில் லோனாவாலாவில் உள்ள ஒரு பங்களாவில் 'அடைத்து' வைக்கப்பட்டு போட்டி நடந்து வந்தது. இதில் இறுதி வெற்றியாளராக ஸ்வேதா திவாரி அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 1 கோடி கிடைத்தது. சல்மான் கான் இந்த போட்டியை நடத்தி வந்தார்.

போட்டியில் கிரேட் காலி 2வது இடத்தைப் பிடித்தார். அஷ்மிதா படேலுக்கு 3வது இடம் கிடைத்தது.

வெற்றி குறித்து ஸ்வேதா திவாரி கூறுகையில், பிக் பாஸ் போட்டியில் வென்றதைப் பெருமையாக கருதுகிறேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

தனது பரிசுத் தொகையை தனது குழந்தைக்காக செலவிடப் போவதாக கூறியுள்ளார் ஸ்வேதா.

நடிகர் ராஜா சௌத்ரியின் முன்னாள் மனைவி தான் ஸ்வேதா திவாரி. கவர்ச்சிகரமான வேடங்களில் டிவியில் நடித்து பிரபலமானவர். தற்போது கணவரைப் பிரிந்து தனது ஒரே குழந்தையுடன் வசித்து வருகிறார் ஸ்வேதா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X