twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வர் முன்னிலையில் தமிழை மென்று துப்பிய குஷ்பு!

    By Staff
    |

    Kushboo
    முத்தமிழறிஞர் எனப் புகழப்படும் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட மிகப்பெரிய நிகழ்வான தமிழ்நாடு அரசு திரை விருதுகள் வழங்கும் விழாவையே சிரிப்பாய் சிரிக்க வைத்தது ஒருவரது கேவலமான தமிழ் உச்சரிப்பு.

    அவர் குஷ்பு.

    இந்த விழாவைத் தொகுத்து வழங்க ஒரு தமிழ் தொகுப்பாளர் கூட இல்லையே என்று அனைவரும் ஆதங்கப்படும் அளவுக்கு தமிழைக் கடித்துக் குதறித் துப்பினார் இந்த முன்னாள் பாலிவுட் நடிகை.

    2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தான் தொகுத்து வழங்கினார்.

    ஆரம்பம் முதலே, தமிழை தப்பும் தவறுமாக அவர் உச்சரித்தார். அவர் தவறாக உச்சரிக்கும்போதெல்லாம் கூட்டத்தினர், 'ஓவென்று' குரல் எழுப்பி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

    ஒருகட்டத்தில், உச்சரிப்புப் பிழைகள் மிகவும் அதிகரித்தபோது, கூட்டத்தில் இருந்தவர்கள், மீண்டும் கத்தினார்கள். இதை முதல்வர் கருணாநிதியும் கவனித்தார்.

    உடனே குஷ்பு, "இது தமிழுங்க. 30 பேஜ் (பக்கங்கள்) இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்று கெஞ்சினார்.

    வள்ளுவர் என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்' என்றார். 'உளியின் ஓசை' என்று சொல்வதற்கு மாறாக, 'ஒளியின் ஓசை' என்றார்.

    இவ்வாறாக தமிழை பாடாய்படுத்திய குஷ்பு, ஒரு கட்டத்தில், "பெரியாரின் கொள்கைகளை" என்று சொல்வதற்கு பதிலாக "பெரியாரின் கொள்ளைகளை" என்றதும் அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஆனாலும் விழா குழுவினர் அசராமல் அனுமதித்தனர் குஷ்புவை.

    இந்த நேரத்தில், சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதல்வர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரம் வந்தது.

    உடனே உஷாரான அமைச்சர் பரிதி இளம்வழுதி, அவசர அவசரமாக குஷ்புவின் தமிழ்க் கொலையை நிறுத்தச் சொன்னார்.

    முதல்வர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். மேலும் மேடையிலிருந்தும் குஷ்பு கீழே சென்றுவிட்டார் (இறக்கப்பட்டார்?). அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார்.

    பின்னர் தனது சிறப்புரையில் இதைக் குறிப்பிடத் தவறவில்லை முதல்வர்.

    'தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழி எந்த அளவு வலுவானது என்று பார்க்க வேண்டும்" என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X