»   »  விஜய் டிவியின் காதலர் தின ஸ்பெஷல்

விஜய் டிவியின் காதலர் தின ஸ்பெஷல்

Subscribe to Oneindia Tamil
Vijay TV Program
காதலர் தினத்தையொட்டி விஜய் டிவியில் திறந்திடு சீசேம், நீயா நானா ஆகிய இரு நிகழ்ச்சிகளும் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பாகவுள்ளன.

விஜய் ஆதிராஜ் தொகுத்து நடத்தும் திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில், பங்கேற்று வெல்லும் போட்டியாளர்களுக்கு ஆடைகள் முதல் லேப்டாப் வரையிலும், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் வைர நகைகள் வரை பரசாக அளிக்கப்படுகிறது.

காதலர் தினத்தையொட்டி நடத்தப்படவுள்ள சிறப்பு திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில் இளம் காதலர்கள் அல்லது புதிதாக திருமணமானவர்கள்.

விஜய் ஆதிராஜ், தனது மனைவி ராச்சனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இதையடுத்து 9 மணிக்கு சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சிறப்பு நிகழ்ச்சியின் தலைப்பு, காதலைச் சொல்வதில் அதிகம் தயங்குவது ஆணா, பெண்ணா என்பதாகும்.

ஆண் என்பதற்கு ஆதரவாக ஒரு குழுவும், பெண்களுக்கு ஆதரவாக ஒரு குழுவும் பங்கேற்கிறது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டிங்குவும், அவரது மனைவி சுப்ரியாவும் பங்கேற்கின்றனர். தங்களது காதல் அனுபவத்தையும் அவர்கள் வாதிடுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil