ஷ்ரேயா ரெட்டி-விக்ரம் திருமணம்

By Staff

Shreya Reddy with Vikram Krishna
நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும், நடிகர் விஷாலின் அண்ணனும், முன்னாள் நடிகருமான விக்ரம் கிருஷ்ணாவுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்பு அஜய் என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தவர் விக்ரம் கிருஷ்ணா. இவர் விஷாலின் அண்ணன். சரிவர வாய்ப்புகள் இல்லாததால் நடிப்பை விட்டு விட்டார். இந்த நிலையில் தம்பி விஷால் ஹீரோவாக அறிமுகமான பின்னர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் விக்ரம் கிருஷ்ணா.

திமிரு, சண்டக்கோழி ஆகியவை இவர் தயாரிப்பில் வந்த படங்களே. திமிரு படத்தில் ஷ்ரேயா ரெட்டி நடித்தபோது, அவருக்கும், விக்ரம் கிருஷ்ணாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இவர்களின் திருமணம் இன்று காலை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் வைத்து நடந்தது. ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் வந்து வாழ்த்தினார்.

இவர்கள் தவிர சத்யராஜ், சிபி, விஜய், மனைவி சங்கீதா, சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், ஸ்ரீகாந்த், மனைவி வந்தனா, இயக்குநர்கள் ஹரி, கோடி ராமகிருஷ்ணா உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நடந்தது. இதில் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X