»   »  ரஜினியின் கோச்சடையானும் ராஜமௌலியின் பாகுபலியும் – பத்து ஒற்றுமைகள்!

ரஜினியின் கோச்சடையானும் ராஜமௌலியின் பாகுபலியும் – பத்து ஒற்றுமைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த ஒரு வாரமாக எந்த இடமாக இருந்தாலும் பாகுபலி என்ற வார்த்தையை தவிற வேறு பேச்சே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அதிர்வலையை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது பாகுபலி 2. அப்படியிருக்க, 2014 இல் இந்தியாவின் முதல் ஃபோட்டோ ரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த கோச்சடையான் படத்தின் கதைக்கும், பாகுபலியின் கதைக்குமிடையே இருக்கும் ஒரு சில ஒற்றுமைகள் உங்களுக்காக.

10 Similarities between Kochadaiiyaan and Baahubali

1. ஆரம்பத்தில் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் நீர் வீழ்ச்சியில் அடித்துவரப்பட்டதன் மூலம் 'ஷிவு' என்கிற மகேந்திர பாகுபலி, ரோஹினி தம்பதிகளுக்குக் கிடைக்கிறார். அதே போல் கோச்சடையானிலும் ராணா என்னும் சிறுவன் நீர் வீழ்ச்சியில் அடித்துவரப்பட்டு கலிங்கபுரி என்னும் ஊரை அடைவான். ஆனால் கர்ணன், தளபதி, இம்சை அரசன் என பல படங்களில் குழந்தை ஆற்றில் விடப்படும் காட்சிகள்தான் இருக்கிறது. குழந்தையை இடமாற்ற வேண்டுமென்றால் திரைக்கதையில் வேறு என்னதான் மாற்றாம செய்ய முடியும்!


2. கோச்சடையானிலும் சரி, பாகுபலியிலும் சரி கதாநாயகர்கள் மன்னர்களாக அல்லாமல் சேனாதிபதிகளாகவே இருக்கின்றனர். இரண்டு படங்களிலுமே மக்களின் ஆதரவு மன்னனை விட சேனாதிபதிகள் பக்கம்தான்.


3. கோச்சடையானும் சரி பாகுபலியும் சரி மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையாலும், புகழாலும் அவர்களின் சொந்த ராஜ்ஜியத்தின் மன்னர்களுக்கே ஏற்படும் காழ்ப்புணர்சியால் வஞ்சகமாகப் பழிதீர்க்கப்படுகிறார்கள்


4. துரதிஷ்டவசமாக இரண்டு படங்களிலுமே அந்த வஞ்சகன் வேடத்தில் நடித்திருப்பவர் நாசர்.


5. பாகுபலியில் தனது மகன் வந்து தன்னைக் காப்பாற்றுவான் என்று காத்திருக்கும் தேவசேனாவைப் போல், கோட்டைப்பட்டினத்தில் சிறை பிடிக்கப்பட்ட போர் வீரர்கள் தங்களை கோச்சடையான் வந்து மீட்டுச் செல்வார் என்று காத்திருக்கின்றனர்,


10 Similarities between Kochadaiiyaan and Baahubali

6. ராஜமாதாவின் கட்டளையை மீறி பெண்ணை மணப்பதால் பாகுபலியிடம் செல்ல வேண்டிய ராஜ்ஜியம் கை மாறுகிறது. கோச்சடையானில் தந்தையின் விருப்பமில்லாமல் ரணதீரனின் தங்கையை மணக்கும் இளவரசர் சரத்குமாருக்கு ராஜ்ஜியத்தை ஆளும் தகுதி இல்லை என அறிவிக்கப்படுகிறது.


7. மகேந்திர பாகுபலி விரும்பும் இளவரசி தேவசேனா, வில் வித்தையிலும் வாள் வீச்சிலும் சிறந்தவள். ரணதீரன் விரும்பும் இளவரசி வதனாதேவியும் வில் வித்தையிலும் வாள் வீச்சிலும் சிறந்தவள்.


8. விசாரணையே செய்யாமல் கோச்சடையான் தேச துரோகம் செய்ததாக அறிவித்து மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாகுபலியில் விசாரணையே செய்யாமல் தேவசேனாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டு, தேவசேனா மகிழ்மதியின் அரசியல் சாசனத்திற்கு எதிராகப் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறார்.


9. மன்னர் ரிஷி கோடகரைக் கொல்ல வந்த குற்றத்திற்காக ராணா சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவார். மன்னர் பல்வாள்தேவனை கொல்ல ஆள் அனுப்பியதற்காக அமரேந்திர பாகுபலி கொல்லப்பட ஆணை பிறப்பிக்கப்படும்.


10. ரணதீரனின் தந்தை கோச்சடையான் மிகப்பெரிய சிவபக்தர். அமரேந்திர பாகுபலின் மகன் ஷிவு (எ) மகேந்திர பாகுபலியும் சிவபக்தர்.


இவை மட்டுமில்லாமல் கோச்சடையானில் முன்கதை வர்ணனையின் போது காட்டப்படும் விஷுவலின், மேம்பட்ட வடிவம்தான் பாகுபலியின் முதல் பாகத்தை நினைவுபடுத்த டைட்டிலின் போது காட்டப்படும் காட்சிகள்.


மகிழ்மதியின் தர்பார் அமைப்பு அப்படியே கோட்டைப்பட்டினத்தின் தர்பார் அமைப்பு போலவே காட்டப்படுகிறது. தேவசேனா கைது செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும்போது பாகுபலி தர்பாருக்கு உள்ளே வரும் காட்சி, அப்படியே கோச்சடையான் முதல்முதலாக நாசருக்கு முன் வந்து நிற்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது.


-முத்துசிவா

English summary
Here is the 10 similarities between Rajinikanth's Kochadaiiyaan and SS Rajamouli's Baahubali 1 & 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil