»   »  ராஜாவுடன் இணையும் தேஜா

ராஜாவுடன் இணையும் தேஜா

Subscribe to Oneindia Tamil
Illaiyaraja
தெலுங்கு இயக்குநர் தேஜா தனது அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜாவை புக் செய்துள்ளார்.

இளையராஜாவுக்கு தெலுங்கு திரையுலகம் புதிதல்ல. தமிழ், மலையாளம் போல தெலுங்கிலும் அவர் நிறையப் படங்கள் செய்து கொண்டுதான் உள்ளார்.

தமிழில் முன்பு போல இளையராஜா அதிக படங்களுக்கு இசையமைக்காவிட்டாலும் கூட மலையாளத்தில் கை நிறையப் படங்களுடன் படு பிசியாக இருக்கிறார் ராஜா. அதே போல தெலுங்கிலும் நிறையப் படங்கள் அவரிடம் உள்ளது.

தமிழில் அவரது இசையமைப்பில் உருவாகும் நான் கடவுள் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இப்போதே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், படம் குறித்து நிலவி வரும் பயங்கர எதிர்பார்ப்புகளும், படத்தின் கதையும் அப்படி.

இந்த நிலையில் பிரபல இயக்குநர் தேஜா தனது அடுத்த படமான 'கேக்கா'வுக்கு இளையராஜாவை புக் செய்துள்ளார். அதேபோல கேமராவுக்கு பி.சி.ஸ்ரீராமை புக் செய்துள்ளார்.

தேஜாவின் கடைசி இரு படங்கள் சரியாக ஓடவில்லை. இதையடுத்து புத்தம் புது அணியுடன் இம்முறை களம் இறங்குகிறார் தேஜா.

சுரேஷ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்குகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil