»   »  இளையராஜாவுக்கு மரியாதை செய்த கபாலி இயக்குநர் ரஞ்சித்!

இளையராஜாவுக்கு மரியாதை செய்த கபாலி இயக்குநர் ரஞ்சித்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரை இசை வரலாற்றிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இனைந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் , நாசர் , பொன்வண்ணன் , இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

100 painting artists honour Ilaiyaraaja

விழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.

லயோலா கல்லூரியில் நடந்த இந்த விழாவில், இளையராஜாவின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் அனைவரும் ஓவியம் வரைந்திருந்தனர்.

கபாலி இயக்குநர் பா.ரஞ்சித், அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தது தனிச் சிறப்பு.

இவ்விழா நாளையும் தொடர்கிறது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இந்த ஓவியங்கள் அனைத்தும் விரைவில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த 100 ஓவியங்களும் புத்தகங்களாக வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

உலகின் மாபெரும் இசைக் கலைஞரான இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தமது ஈடற்ற படைப்பாற்றலினாலும், கடுமையான உழைப்பினாலும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலகின் தன்னிகரற்ற கலைஞராக மிளிர்கிறார்.

100 painting artists honour Ilaiyaraaja

இந்திய அரசு, நூற்றாண்டு சாதனையாளர் என்று அறிவித்து அவரை கவுரவித்திருக்கிறது. என்.டி.டி.வி மற்றும் சி.என்.என், ஐ.பி.என் நடத்திய கருத்துக் கணிப்பில் 1913ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திரைத்துறையில் 'நூற்றாண்டின் தலைசிறந்த முதல் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா' என்று இந்திய ரசிகர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.

இசைஞானி இளையராஜாவின் படைப்பு மேதமையை மக்களிடையே கொண்டாடுவது நமது கடமையாக இருக்கிறது. இந்த புரிதலின் அடிப்படையில்தான் சமகால கலைஞர்களில் ஒரு பிரிவினராக இருக்கக்கூடிய ஓவியர்கள் இசைஞானியின் படைப்புச் சாதனைகளை வண்ணங்களினால் கௌரவப்படுத்தும் பணியை முன்னெடுக்கிறார்கள்.

அது முப்பெரும் விழாவாக மூன்று கட்டங்களாக நிகழ இருக்கிறது.

நம் இந்திய மரபில் இசைக்கோர்வைகளை காட்சிமயமாக சித்தரிப்பது ஒரு படைப்பு பாணியாகும். 600 ஆண்டுகளுக்கு முன்பு ராகமாலிகா என்ற பெயரில் இந்தியாவில் பயன்படத்தப்பட்ட அந்த மரபில் இசை சிற்பமாகக்கூட வடிக்கப்பட்டது. ஒலியினை குறியீடாக, தோற்றமாக மாற்றும் செயல் என்பது மனிதகுல வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே உருவாகி ஓவியமும் இசையும் பிரிக்க முடியாத ஒரு கலைப்பண்பாடாக தொடர்ந்து வருகிறது.

100 painting artists honour Ilaiyaraaja

யாவற்றிலும் உறவு காணும் பாவனையே கலை (ஔவை-குறள்)

நாதமே காட்சி, காட்சியே நாதம்... புலன் உணர்வு அனைத்தும் காட்சிமயம். எனபன்னிரண்டாம் நூற்றாண்டு சங்கீத ரத்னசாரமும், பதினாழாம் நுற்றாண்டு தியானக் குறிப்புகளும், பதினாராம் நூற்றாண்டு ராஜபுத்திரபகாரிதக்காண முகலாய வகை இசை ஓவியங்களால் மலர்ந்து மகிழ்ந்தது நம் கலை வரலாறு.

ஆனால் அது மறைந்துப்போய்விட்டது. இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த கன்டன்ஸ்கி என்ற ஓவியக் கலைஞர் இசையை ஓவியமாக்கும் முயற்சியை 1911ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அதற்குப் பிறகு அது இயக்கமாக பரிணமித்து ஐரோப்பிய நாடுகளில் பரவியது. அதன் தாக்கத்தில் பல ஐரோப்பிய ஓவியர்கள் இந்திய செவ்வியல் இசைப் பண்கள் சிலவற்றை ஓவியமாக்கியிருக்கிறார்கள். இருந்தும் இந்தியாவில் அது பெரிதும் பரவவில்லை.

இந்த சூழ்நிலையில் இவ்விசை ஓவியங்கள் இயற்கை, புராண, சமூக சூழல்களைக் காட்சி தோற்றங்களாகக் கொண்டவை. அதன் ஊடாக இசையாலாகும் தனிநபர் பாவிக்கும் வண்ண அதிர்வுகளும், கோடுகளும், இந்த நூற்றாண்டு நுண்கலையாக இளையராஜாவின் இசை மேதமையை கொண்டாடுகிறது."

English summary
100 drawing artists have painted Ilaiyaraaja's music Today to honour the Maestro's 1000 movies achievement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil