»   »  பாபிலோனா தம்பி கைது

பாபிலோனா தம்பி கைது

Subscribe to Oneindia Tamil
Bobylona
சென்னையைச் சேர்ந்த கால் சென்டர் ஊழியரைக் கடத்திய வழக்கில் கிளுகிளு நடிகை பாபிலோனாவின் தம்பி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு தம்பியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

நடிகை பாபிலோனாவின் குடும்பம் அடிக்கடி கலாட்டாவிலும், சர்ச்சையிலும் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. முன்பு பாபிலோனாவின் சித்தியான கவர்ச்சி நடிகை மாயா மற்றும் அவரது மகன் விக்கியால் பெரிய பிரச்சினை எழுந்தது.

தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுடன் தகராறு செய்து சர்ச்சையில் சிக்கி தலைமறைவானார் மாயா. இந்த நிலையில் கடத்தல் வழக்கில் பாபிலோனாவின் தம்பி சிக்கி கைதாகியுள்ளார். ஒரு தம்பி தலைமறைவாகி விட்டார்.

வளசரவாக்கத்தைச் சேர்ந்த நடன நடிகர் நியூட்டன் (வயது 23). இவர் மேடைப் பாடகராகவும் உள்ளார். புதுப்பேட்டையைச் சேர்ந்த ஷெல்டன் என்பவர் இவருடைய நண்பர். இவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் ஒரு கச்சேரியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வளசரவாக்கத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆலந்தூர், வ.உ.சி. தெரு அருகே வந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து நியூட்டன் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அவரது நண்பர் ஷெல்டனை காரில் கடத்திச் சென்றது.

இதுகுறித்து நியூட்டன், வளசரவாக்கம் போலீசில் புகார் செய்ததுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

நியூட்டன் கொடுத்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷெல்டனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு கடத்தல் கும்பல் ஷெல்டனை எழும்பூரில் விடுவித்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் தம்பி பாலு, அவரது மற்றொரு தம்பி விக்கி (மாயாவின் மகன்), கிரி, சுரேந்திரன் ஆகியோருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

சில நாட்களுக்கு முன்பு ஸ்னூக்கர் விளையாட்டின் போது ஷெல்டனுக்கும், கிரி, சுரேந்திரன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறும், அதன் தொடர்ச்சியாக மோதலும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்த கடத்தல் நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட பாபிலோனாவின் தம்பி பாலு, கிரி மற்றும் சுரேந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள நடிகை மாயாவின் மகன் விக்கியை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

விக்கி பலமுறை பல்வேறு சர்ச்ைசகளில் சிக்கியுள்ளார். முன்பு ஒரு முறை வட பழனி பகுதியில் சாலையில் குடித்து விட்டு தகராறு செய்தார். அப்போது அவரைப் பிடிக்க முயன்ற பெண் சப் இன்ஸ்பெக்டரின் நெஞ்சில் ஓங்கிக் குத்தி விட்டுத் தப்பினார்.

இப்போது ஆள் கடத்தல் என்ற மிகப் பெரிய குற்றச் செயலில் சம்பந்தப்பட்டுள்ளார் விக்கி. இதனால் இம்முறை அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil