»   »  மிஸ். சென்னை வைதேகி...

மிஸ். சென்னை வைதேகி...

Subscribe to Oneindia Tamil
Madhavan with Vaideki
திரிஷா போன்ற பெரும் தலைகள் வாகை சூடிய மிஸ் சென்னை பட்டத்தை சென்னைப் பெண் வைதேகி இந்த ஆண்டு வென்றுள்ளார்.

நடிக்க வந்த பின்னர் ரசிகர்கள் மனதை வென்ற திரிஷா, நடிக்க வருவதற்கு முன்பு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர். அந்தப் பட்டம்தான் அவருக்கு மாடலிங் வாய்ப்புகளை வாரிக் கொண்டு வந்தது.

மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் சிறு சிறு வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்த திரிஷா, சாமி படம் மூலம் உச்சாணிக்குப் போய் விட்டார். அவரது இடம் இன்னும் கூட ஸ்டிராங்காகவே உள்ளது.

நிற்க. இந்த ஆண்டுக்கான மிஸ் சென்னை மற்றும் மிஸ்டர் சென்னை போட்டி சென்னையில் நடந்தது. நடிகர் மாதவன், பாடகி சின்மயி ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த 20 கல்லூரிளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இந்தப் போட்டியில் முட்டி மோதினர். எத்திராஜ் கல்லூரியில் போட்டி நடந்தது.

வழக்கமாக எத்திராஜ் கல்லூரிக்குள் வாட்ச்மேனைத் தவிர வேறு ஆண்களைப் பார்க்க முடியாது. ஆனால் வாட்டசாட்டமான, ஹேன்ட்சம் வாலிபர்கள், இந்தப் போட்டிக்காக குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்த காட்சி படு ஜோர்.

கடும் போட்டிக்கு மத்தியில் சச்சின் மிஸ்டர் சென்னையாகவும், வைதேகி மிஸ் சென்னையாகவும் வாகை சூடினர்.

Please Wait while comments are loading...