Just In
- 14 min ago
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி!
- 1 hr ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- 2 hrs ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 3 hrs ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
Don't Miss!
- News
கொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ
- Sports
என்ன டீம் இது? இதை வைச்சுகிட்டு இந்தியாவை ஜெயிக்க முடியுமா? சிக்கலில் இங்கிலாந்து!
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!
- Finance
பட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..!
- Automobiles
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான்கு புதிய ஜோடிகள் அறிமுகமாகும் 'செங்காடு'!

எச்.எம்.டி. பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வி.இராவணன் தயாரித்துள்ள படம் 'செங்காடு'. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் ரமேஷ் ராமசாமி.
இந்தப் படத்தில் மொத்தம் நான்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.
புதுமுகங்கள் அருண்பிரகாஷ் - ரூபா, சுரேஷ் - நகினா, உத்தம் - விமலா, விக்கி - ப்ரியா என நான்கு ஜோடிகளுடன் முத்துக்கருப்பன், அன்பழகன், வேணுகோபால், ரகுநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் ரூபா, ஐந்து தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பித்தக்கது.
ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்க, பாடல்களை இளையகம்பன் எழுதி உள்ளார். மணி ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் பாபியா எடிட்டிங் செய்துள்ளார். நிர்மல் நடனம் அமைக்க, கலையை பூபதி கவனிக்கிறார். பாலன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இது வரை சினிமா படப்பிடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, வேதாரண்யம் பகுதியில் உள்ள அழகிய கிழகிய கிராமங்களில் செங்காடு படப்பிடிப்பு நடந்தது.
செங்காடு குறித்து இயக்குநர் ரமேஷ் ராமசாமி கூறுகையில், "இது நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதை. நண்பர்களுக்குள் துரோகம் நடந்தால் அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அழுத்தமான திரைக்கதைதான் இந்தப் படத்துக்கு முக்கிய பலம்.
காதல், கவர்ச்சி, நட்பு, பாசம், சென்டிமெண்ட், நகைச்சுவை, என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஜனரஞ்சகப் படமாக செங்காடு அமைந்திருக்கிறது. மற்ற மொழிகளிலும் வெளியிடுகிற அளவுக்கு இது கமர்சியல் படமாக உருவாகி உள்ளது.
புதிய கோணத்தில் திரைக்கதை அமைத்து சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக உருவாகி உள்ளது. ஒரு இடத்தில் கூட போரடிக்காமல், காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத சம்பவங்களோடு படு வேகமான திரைக்கதை, பரபரப்பும், விறுவிறுப்பும் கொண்ட காட்சிகள், எதிர்பாராத க்ளைமாக்ஸ் என படம் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு உருவாகி உள்ளது..." என்றார்.
புதுமுகங்களை வைத்து படம் இயக்க காரணம் என்ன? என்று அவரிடம் கேட்டதற்கு, "இந்த கதையில் யார் நடித்தாலும் சுவராஸ்யம் குறையாது. இதில் கதைதான் ஹீரோ. பிரபல கதாநாயகர்களை தேடிச் சென்று நான்கு கதாநாயகர்களை இணைத்து படமெடுப்பது இந்த காலகட்டத்தில் சாத்தியமா சொல்லுங்க.... அதனால் புதுமுகங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். எல்லோரும் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்கள். அவர்கள் புதுமுகங்கள் என்பதை விட அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார்கள். படமும் பார்ப்பதற்கும் புதுசாக இருக்கும்.
அதே போல யதார்த்தம் இருக்க வேண்டும் என்று கிராமங்களை நோக்கிச் சென்றேன். அதுவும் படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்திருக்கிறது. கற்பனை கதையாக இருந்தாலும் யதார்த்தம் அதன் அழகு கெடாமல் இருக்கும். இப்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதியில் பாடல் இசை வெளியிடுகிறோம். அதன் பிறகு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்...," என்றார்.