twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சிகரம் தொட சிறகு தந்த மீடியா...' உருகும் சினேகன்!

    By Staff
    |

    Snehan
    'என்னை மேலும் பல சிகரங்களுக்கு அழைத்து செல்லும் பலமான சிறகுகளாக மீடியா' திகழ்கிறது என்கிறார் சினேகன்.

    யோகி படத்தில் அமீருக்கு அடுத்து நினைவில் நிற்பவர்களில் ஒருவர் பாடலாசிரியர் சினேகன். நீண்ட முடியோடு, கொடூர மனம் கொண்ட வில்லனாக வருகிறார்.

    முதல் படத்திலேயே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக நடித்துவிட்டார் என பாராட்டுக்களும் அவருக்குக் கிடைத்துள்ளன.

    இதற்கு நன்றி தெரிவித்து சினேகன் அனுப்பியுள்ள கவிதை அறிக்கை:

    கவனிப்பார் இன்றி கிடக்கும் திரை உலக
    குழந்தைகளுக்கு அன்னை தெரசா போல
    ஆதரவு தரும் பத்திரிகை நண்பர்களுக்கு,
    உங்களால் புகழப்பட்ட
    சினேகன் நன்றி மடல்!

    அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்காது,
    விமர்சிக்கபடாத நடிகன் சிறந்த கலைஞனாக
    முடியாது!!

    உங்கள் விமர்சனங்கள் என்
    வாழ்கைக்கு வலு சேர்த்து இருகின்றது,

    இரண்டாவதாக வருபவனை உலகம் ஒரு
    போதும் நினைவு வைத்துகொள்ளாது என்ற
    வார்த்தையை பொய்யாக்கி "யோகி"யில்
    இரண்டாவதாக வந்த என்னை மக்களிடையே
    முதலாவதாக கொண்டு சென்றது..
    உங்கள் விமர்சனம்தான்.

    விமர்சனங்கள் எல்லோர் மீதும் பாயும், ஆனால்
    புத்திசாலிகள் மட்டுமே அதை
    உபயோகபடுத்திக்கொள்வார்கள்,

    நான் அடையும் உயரம் என்
    சிறகுகளின் பலத்தை பொருத்தது, என்னை
    மேலும் பல சிகரங்களுக்கு அழைத்து செல்லும்
    பலமான சிறகுகள் நீங்கள் தான்..

    கொலம்பஸ்
    பாதி வழியில் தன் பயணத்தை முடித்து,
    வந்தவழி திரும்பி இருந்தால், வரலாறு அவரை
    நினைவு வைத்துக்கொண்டு இருக்காது..

    நானும் திரைகடலில் பாடலாசிரியர் என்ற
    பலத்துடன் நடிகனாகவும் பயணிக்க
    ஆரம்பித்துவிட்டேன், நீங்கள் தான் என்
    கலங்கரை விளக்குகள், உங்கள் வழிகாட்டுதலுடன்
    என் பயணம் வெற்றி பயணமாகட்டும்.

    இந்த சடையனை, தமையனாக பாவித்து
    நீங்கள் தந்த விமர்சனத்திற்கு நன்றி...
    நட்போடும், நன்றியோடும்,

    -சினேகன்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X