twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட தலைப்பை மாற்றும் பாக்யராஜ்!

    By Staff
    |

    Bagyaraj with daughter Saranya
    பழைய வெற்றிப் படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்குச் சூட்டுவது எத்தனை பெரிய தவறு எனப் புரிந்து கொண்டேன். எனவே இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய வார்ப்புகள் படத்தின் தலைப்பை மாற்றப் போகிறேன் என்றார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இந்தி பட கலைஞர்கள் ஷம்மி கபூர், பி.சி.பரூடா, குருதத், மெஹபூப் கான் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை விஸ்டம் ட்ரீ பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.

    இதற்கான விழா சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடந்தது. புத்தகங்களை, தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர்கள் பாலு மகேந்திரா, கே.பாக்யராஜ், சிவாஜி மகன் ராம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் பாக்யராஜ் பேசியதாவது:

    எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், புதிய சினிமா படங்களுக்கு பிரபலமான பழைய பட தலைப்பை வைக்கக் கூடாது என்றார். நானும் கூட அந்தத் தவறை செய்திருப்பதை உணர்ந்து கொண்டேன். என் மகன் நடிக்க, நான் இயக்கும் படத்துக்கு என் குருநாதரின் பழைய படமாக புதிய வார்ப்புகள் தலைப்பைச் சூட்டியிருக்கிறேன்.

    பழைய தலைப்பை புதிய படத்துக்கு வைக்கும்போது அந்த படம் வெற்றி பெற்றால் பரவாயில்லை. இல்லாவிட்டால் அதே பெயரில் வந்த பழைய படத்தின் பெயரும் கெட்டுவிடும்.

    புரட்சித் தலைவர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் மிகப் பெரிய வெற்றிப் படம். அந்த பெயரை இப்போது ஒரு படத்துக்கு வைத்து, அது ஓடாமல் போனால், அடுத்த சந்ததிகளுக்கு எந்த உலகம் சுற்றும் வாலிபன் ஒடவில்லை என்ற குழப்பம் வரும். தியோடர் பாஸ்கரன் பேச்சுக்கு பிறகு புதிய வார்ப்புகள் தலைப்பை மாற்ற யோசித்துக் கொண்டிருக்கிறேன், என்றார் பாக்யராஜ்.

    இயக்குனர் பாலு மகேந்திரா பேசுகையில், தியோடர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிவாஜி கணேசன் புத்தகத்தை தமிழில் வெளியிடுவேன், என்றார். ஏவி.எம் சரவணன், தியோடர் பாஸ்கரன், அருணா வாசுதேவ், யூகிசேது உட்பட பலர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X