»   »  வல்லமை தாராயோ விவகாரம்: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி

வல்லமை தாராயோ விவகாரம்: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kushboo
கும்பகோணம்: சென்னையில் நடந்த வல்லமை தாரோயோ பட பூஜையின்போது இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கை கும்பகோணம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வல்லமை தாராயோ பட பூஜையின்போது இந்து கடவுள்களின் சிலைக்கு அருகே கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்ததன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை குஷ்பு புண்படுத்தி விட்டதாக கூறி கும்பகோணம் மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இந்து முன்ணி சார்பில் அதன் செயலாளர் குருமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால், இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை. வழக்கின் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைப் பரிசீலித்தபோது 295, 295ஏ, 296 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த வழக்கு அமையவில்லை.

எனவே இதை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோன்ற வழக்கு சென்னை மற்றும் ராமேஸ்வரம் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil