For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அய்யனுக்கு 'அரியசெல்வி' திவ்யாபத்மினி!

  By Staff
  |

  Divyapadmini
  வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எல்.பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'அய்யன்'. மாமதுரை படத்தில் நாயகனாக அறிமுகமாகி பாராட்டுகளைப் பெற்ற வாசன் கார்த்திக் இப்படத்தில் வீரம் மிக்க முனியசாமி எனும் பாத்திரத்தில் நடிக்கிறார்.

  அவருக்கு ஜோடியாக அரியசெல்வி எனும் பாத்திரத்தில் திவ்யாபத்மினி அறிமுகமாகிறார். இந்தக் கதைக்குப் பொருத்தமாக எத்தனையோ நடிகைகளின் புகைப்படங்களைப் பார்த்தும் திருப்தியடையாத இயக்குநர், திவ்யாபத்மினியைப் பார்த்தும் ஓகே சொல்லிவிட்டாராம்.

  இவர்களுடன் பிதாமகன் மகாதேவன், சண்முகராஜன், சிங்கமுத்து, இளவரசு, சூர்யகாந்த், கிரேன் மனோகர், சிசர் மனோகர், முத்துக்காளை, அல்வா வாசு, சூப்பர்குட் லட்சுமணன், சௌந்தர், சுப்புராஜ், விஜயகணேஷ், நெல்லை சிவா, போண்டா மணி என பலரும் நடிக்கிறார்கள். முக்கியமான காமெடி வேடத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார்.

  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் கேந்திரன் முனியசாமி. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். கவிஞர் சினேகன் பாடல்கள் எழுத, காசி வி.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

  'கத்தாழ கண்ணால குத்தாத…' புகழ் தினா நடனம் அமைக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைக்கிறார். கலை என்.கே.பாலா, படத் தொகுப்பு - பி.சாய் சுரேஷ், தயாரிப்பு நிர்வாகம் - கே.ஆர்.பாலமுருகன்.

  இப்படத்துக்காக பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜா இசையில்,

  ஏ... சிவகாமி, அடியே சிவகாமி...

  ஏ... தென்மதுர பொண்ணு

  இது நான் பொறந்த மண்ணு

  குலுங்கும் வாழக் கன்னு- நீ

  சிலுத்து நிக்கிற பொண்ணு...

  என்ற பாடல் பாதிவானது. சினேகன் எழுதிய பாடல் இது. பாடலைக் கேட்டபோது, ஒலிப்பதிவுக் கூடமே திருவிழாக் கோலம் பூண்டது போலாகிவிட்டதாம்.

  பாடலைக் கேட்டவர்கள் மெய்சிலிர்த்துப் போய் இசைஞானியின் இசையைப் பாராட்டினார்களாம்.
  இதுகுறித்து இயக்குநர் கேந்திரன் முனியசாமி இப்படிக் கூறுகிறார்:

  "இந்தப் படத்தோட கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும், 'ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கு. இது நிச்சயமா வெற்றிப்படமா அமையும்' என்று சொன்னார்.

  இந்தப் படத்தின் இசைக்காக முழுக்க முழுக்க கிராமிய இசைக் கருவிகளையே ராஜா சார் பயன்படுத்தி இருக்கார். முதல் பாடலைக் கேட்ட எல்லாரும் அப்படியே அசந்து போய் நின்னுட்டாங்க. ராஜான்னா சும்மாவா... திரை இசையின் ராஜாவாச்சே அவர்... இந்த ஆண்டோட சூப்பர் ஹிட் பாடல்களா அய்யன் பாடல்கள் அமையப் போகுது. நமது மண்ணின் மணத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிற படமா இது நிச்சயம் அமையும். இளையராஜாவின் இசைக்கு அதில் பெரும் பங்கு வகிக்கப்போகிறது... இந்த மாசம் 15-ம் தேதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துல படப்பு நடத்தப் போகிறோம்..." என்றார்

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X