»   »  பைனான்ஸ் சங்கடத்தில் சரோஜா!

பைனான்ஸ் சங்கடத்தில் சரோஜா!

Subscribe to Oneindia Tamil
Saroja movie still
சென்னை-600028 புகழ் வெங்கட் பிரபு இயக்கும் சரோஜா திரைப்படம் பாதி வளர்ந்த நிலையில் பைனான்ஸ் இல்லாமல் தவிக்கிறது.

கடந்த இருபது தினங்களாக சரோஜா யூனிட் ஐதராபாதில் படப்பிடிப்புக்காக முகாமிட்டுள்ளது. இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் போதும், முதல் ஷெட்யூல் முடிந்துவிடும் எனும் சூழ்நிலையில், பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது படம். இதனால் கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு நடக்கவில்லை.

காரணம், படத்தின் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இதற்கு முன் தயாரித்த வாழ்த்துகள் படம் சரியாகப் போகாததுதான் என்கிறார்கள்.

ஏற்கெனவே தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்ததால் பல பிரச்சினைகளில் சிக்கி பத்தாண்டுகள் படமே எடுக்க முடியாமல் இருந்தவர் சிவா. பிரமிட் சாய்மிரா மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியுடன் வாழ்த்துகள் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இப்படமும் சொல்லிக் கொள்கிற மாதிரி ஓடவில்லை.

இதனால் சிவாவின் அடுத்த படமான சரோஜாவுக்கு பைனான்ஸ் தரத் தயங்குகின்றனர். தொடர்ந்து பணம் வராததால், படப்படிப்பு நடத்த முடியாமல் மொத்த படப்பிடிப்புக் குழுவும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், ஹோட்டல்களிலும் கடந்த ஒரு வாரமாக பொழுதைக் கழித்துக் கொண்டுள்ளனர். இன்னும் சில தினங்கள் பார்த்துவிட்டு ஊர் திரும்பிவிடலாம் என தனது யூனிட்டுக்குக் கூறிவிட்டாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil