»   »  மல்லிகா ஷெராவத்துடன் சித்து!!

மல்லிகா ஷெராவத்துடன் சித்து!!

Subscribe to Oneindia Tamil
Mallika Sherawat
கிரிக்கெட்டிலும், அரசியலிலும் சிக்சர் அடித்த சித்து அடுத்து சினிமாவிலும் பவுண்டரிகளை விளாச வருகிறார்.

'சிக்சர் சித்து' என்ற செல்லப் பெயருடன் ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் கலக்கியவர் சித்து. பின்னர் கொலை வழக்கில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கை சிதைந்தது. இதையடுத்து பாஜகவில் இணைந்தார். எம்.பியும் ஆனார்.

இந் நிலையில் அடுத்த இன்னிங்ஸாக சினிமாவுக்கு வருகிறார் சித்து. பஞ்சாபி மொழியில் தயாரிக்கப்படும் 'மேரா பிந்த்' என்ற படத்தில் சித்துதான் நாயகனாம். அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் யார் தெரியுமா 'கிளாமர் 20-20' சாம்பியனான மல்லிகா ஷெராவத்.

வெளிநாட்டில் வசிக்கும் பெரும் பணக்காரரான சித்து, தான் சேர்த்த பணத்தோடு இந்தியா திரும்புகிறார். இங்கு இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் ஏழைகளாகவே இருப்பதைப் பார்த்து மனம் கொதிக்கிறார்.

அவர்களுக்காக பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என நிர்மானித்து ஏழைகளுக்காக வாழ ஆரம்பிக்கிறார்.

இந்தக் கதையை எங்கோ கேட்டது போல இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா. சத்தியமாக சிவாஜி படக் கதைதான். ஆனால் கொஞ்சம் போல உல்டா செய்து எடுக்கவுள்ளனர்.

மல்லிகாவுடன் நடிப்பது குறித்து சித்து கூறுகையில், சினிமாவில் நடிக்கக் கூடிய தகுதி எனக்கு இருப்பதால்தான் நடிக்க கூப்பிட்டுள்ளனர். மல்லிகா ஷெராவத் மிகச் சிறந்த அழகி. அவருடன் ஜோடியாக நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

கிரிக்கெட்டிலும் அரசியலிலும் சாதித்து விட்டேன். சினிமாவிலும் ஒரு கை பார்த்து விடுவது என்ற முடிவுடன் உள்ளேன் என்றார் தனக்கே உரிய ஜாலி பாணியில்.

சினிமாவில் சித்து செஞ்சுரி அடிப்பாரா, டக் அவுட் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil