twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பருத்தி வீரனுக்கு 6 பிலிம்பேர்!

    By Staff
    |

    Karthi with Priyamani
    அமீரின் பருத்தி வீரன் படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளிச் சென்றது.

    தென்னிந்திய மொழிகளில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களுக்கான 55-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் சனிக்கிழமை மாலை நடந்தது.

    தமிழில் அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படத்துக்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (கார்த்தி), சிறந்த நடிகை (ப்ரியாமணி), சிறந்த குணச்சித்திர நடிகர் (சரவணன்), சிறந்த குணச்சித்திர நடிகை (சுஜாதா) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி திரைப்படத்துக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன. இப்படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கே.வி.ஆனந்துக்கும் வழங்கப்பட்டன.

    சிறந்த பாடலாசிரியருக்கான விருது பா.விஜய்க்கு (உன்னாலே உன்னாலே) வழங்கப்பட்டது.

    சிறந்த பாடகருக்கான விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் (மொழி), சிறந்த பாடகிக்கான விருது சாதனா சர்க்கமுக்கும் (கிரீடம்) வழங்கப்பட்டது.

    சிவகுமார், ஜெயப்பிரதா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    பிறமொழிகளில் விருதுபெற்ற கலைஞர்கள் விவரம்:

    தெலுங்கு:

    சிறந்த படம்: ஹேப்பி டேஸ்

    சிறந்த இயக்குநர் : சேகர் கம்முலா (ஹேப்பி டேஸ்)

    சிறந்த நடிகர்: ஜூனியர் என்டிஆர் (எமதொங்கா)

    சிறந்த நடிகை: த்ரிஷா (ஆடவாரி மாடலாகு அர்த்தலே வேறுலே)

    சிறந்த புதுமுகம்: ராம் சரண் தேஜா (சிறுத்தா)

    சிறந்த புதுமுக நடிகை: ஹன்சிகா

    சிறந்த குணச்சித்திர நடிகர்: ஜெகபதி பாபு (லட்சியம்)

    சிறந்த குணச்சித்திர நடிகை: சோனியா (ஹேப்பி டேஸ்)

    மலையாளம்:

    சிறந்த படம்: கத பறயும் போல்

    சிறந்த இயக்குநர் : பாபு திருவல்லா (தனியே)

    சிறந்த நடிகர்: மோகன்லால் (பரதேசி)

    சிறந்த நடிகை: மீரா ஜாஸ்மின் (ஒரே கடல்)

    சிறந்த குணச்சித்திர நடிகர்: சாய்குமார் (ஆனந்த பைரவி)

    சிறந்த குணச்சித்திர நடிகை: லட்சுமி கோபாலசுவாமி (பரதேசி)

    சிறந்த இசையமைப்பாளர்: ஒசேபத்தன் (ஒரேகடல்)

    கன்னடம்:

    சிறந்த படம்: ஆ தினகலு

    சிறந்த இயக்குநர் : சைதன்யா (ஆ தினகலு)

    சிறந்த நடிகர்: விஜய் (துனியா)

    சிறந்த நடிகை: ரஷ்மி (துனியா)

    சிறந்த குணச்சித்திர நடிகர்: சரத் லோகிதாசா (ஆ தினகலு)

    சிறந்த குணச்சித்திர நடிகை: தாரா (ஈ பந்தனா)

    சிறந்த இசையமைப்பாளர்: மனோ மூர்த்தி (மிலனா)

    மோகன் லாலுக்கு இலியானாவும், கார்த்திக்கு நயன்தாராவும், பிரியாமணிக்கு சரத்குமாரும் அவர் மகள் வரலட்சுமியும், த்ரிஷாவுக்கு வெங்கடேஷூம் விருதுகளை வழங்கினர். அமீருக்கு கேத்ரினா கைஃப் விருது வழங்கினார்.

    நிகழ்ச்சியின் இடையிடையே, நடிகைகள் நமீதா, ரம்பா, பூனம் பாஜ்வா, ஹன்ஸிகா, ஷோபனா, ஸ்ரேயா, நடிகர்கள் ராஜா, வினீத் ஆகியோரின் நடனம் இடம்பெற்றது.

    நடிகர் மாதவனும் நடிகை சிந்தூராவும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X