twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காங்கிரசுக்கு ரஜினி-விஜய் 'பெப்பே' ஏன்?

    By Staff
    |

    'சூப்பர் ஸ்டார் ரஜினி, முன்னணி இளம் நடிகர் விஜய் இருவரும் இனி காங்கிரஸ் கட்சி இருக்கும் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள். இந்த அரும்பெரும் பணியை தனது பக்குவற்ற நடத்தை, பேச்சு மூலம் காட்டிவிட்டார் ராகுல் காந்தி' என புலம்புகிறார்கள் மாநில காங்கிரஸ் தலைவர்கள்.

    இன்னொரு பக்கம், ராகுலை அழைத்து வந்து தமிழக அரசியலில் பெரிதாக சீன் காட்ட நினைத்த தங்களுக்கு மிகப்பெரிய நோஸ் கட் தந்துவிட்டார் முதல்வர் கருணாநிதி என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

    ராகுலை சென்னைக்கு அழைத்த கையோடு, ரஜினியை அரசியலுக்கு அழைக்குமாறு கேள்வி கேட்குமாறு நிருபர்களைத் தூண்டியுள்ளனர் சில காங்கிரஸ் நிர்வாகிகள். ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்த கதையாக, 'ரஜினி கிரிமினல் இல்லை. அவர் காங்கிரசில் சேரலாம்' என்ற ராகுல் வில்லங்கமாகப் பேச, இது ரஜினி ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது.

    நரசிம்மராவ் முதல்வர் பதவியை தருவதாகச் சொல்லி அழைத்தும் அரசியலுக்கு வராத ரஜினியை, மரியாதையில்லாமல் பக்குவமற்ற முறையில் ராகுல் பேசியது, மாவட்ட அளவில் காங்கிரஸ் மீது ரஜினி ரசிகர்கள் சிலர் வைத்திருந்த அபிமானத்தையும் குலைத்துவிட்டது.

    'இனி ரஜினி பக்கமே காங்கிரஸ் தலைவைத்துப் படுக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டுப் போய்விட்டார் ராகுல்..' என காங்கிரஸ் தலைவர்களே முணுமுணுக்கிறார்கள்.

    ரஜினி நிச்சயம் எந்தக் கட்சியிலும் சேரமாட்டார். ஆனால் அவருடன் சுமுகமான உறவை வைத்திருந்தால் அவரது ரசிகர்களின் ஆதரவாவது கிடைத்திருக்குமல்லவா என்பது இவர்கள் கேள்வி.

    மேலும் ராகுல் இப்படிச் சொன்ன இரண்டாவது நாளே ரஜினியை அறிவாலயத்துக்கு வரவழைத்த முதல்வர் கருணாநிதி, தங்கள் தொலைக்காட்சியினரை விட்டு கேள்வி கேட்கச் செய்து, அந்த இடத்திலேயே ராகுலின் அழைப்புக்கு அதிரடியாக ரஜினியை மறுப்பும் சொல்ல வைத்ததுதான் இதில் ஹைலைட் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    விஜய்க்கோ இருதலைக் கொள்ள எறும்பின் நிலை.

    காரணம் அவர் ராகுலைச் சந்தித்தேன் என்று அறிவித்த சில தினங்களிலேயே, ஷோபா கல்யாண மண்டபத்தின் முன்வாசலை இடிக்க வேண்டி மாநகராட்சியிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளதை தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியாது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

    அதேநேரம் காங்கிரஸ் தலைவர்களால் பல கசப்பான அனுபவங்களையும் விஜய் சந்தித்துவிட்டாராம். கடந்த மாதம் 24ம் தேதி ராகுலை நடிகர் விஜய் சந்தித்து பேசிவிட்டு வந்ததும் பரபரப்பாக பல விஷயங்கள் அலசப்பட்டன. அவருக்கு பல பதவிகள் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். ஆனால் வழக்கமான காங்கிரஸ் கோஷ்டிச் சண்டையில் விஜய் விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர்.

    முதலில் காங்கிரசின் இளைஞர் பிரிவுக்கு விஜய் தலைமை பொறுப்பு ஏற்பார் என்று தகவல் வெளியானது. பிறகு விஜய் 35 வயதை கடந்துவிட்டதால் அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

    பிறகு விஜயை எம்.பி. ஆக்கப்போகிறார்கள் என்றனர். ராகுல் முன்னிலையில் விஜய் காங்கிரசில் சேரப்போகிறார் என்றனர். ஆனால் எந்தப் பதவியும் தராமல் இழுத்தடித்தது விஜய்யை அப்செட் ஆக்கிவிட்டதாம்.

    எந்த மரியாதையும், பதவியும் தர விரும்பாத ராகுலைப் பிடித்துக் கொண்டு மாநில ஆளும் தரப்பை பகைத்துக் கொள்வதை விட, இன்னும் சில ஆண்டுகள் பதவியில் இருக்கப் போகிற திமுகவுடன் சுமுகமாகப் போய் பல படங்கள் பண்ணுவதுதான் பாதுகாப்பு என நண்பர்களும், நலம் விரும்பிகளும் எடுத்துச் சொன்னதால்தான், உடனடியாக பிரஸ் மீட் போட்டுவிட்டாராம் விஜய்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X