twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கரீனா அரை நிர்வாண போஸ்... சேலையுடன் குவிந்த சிவசேனா தொண்டர்கள்!

    |

    Saif and Kareena
    முதுகு முழுக்கத் தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை கரீனா கபூர் வீட்டு முன் சேலையுடன் குவிந்தனர் சிவசேனா கட்சித் தொண்டர்கள்.

    கரீனாகபூர், சயீப் அலிகான் ஜோடியாக நடித்த குர்பான் இந்தி படம் வருகிற 20ந் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.

    தீவிரவாதிகள் பற்றிய இன்னும் ஒரு இந்திப்படம்தான் குர்பான். நிஜ வாழ்க்கையில் காதலர்களான கரீனா கபூரும், சயீப் அலிகானும் இதில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

    அமெரிக்காவில் வசிக்கும் கரீனா கபூர் உடல் நலமின்றி இருக்கும் தந்தையை காண டெல்லி வருகிறார். அப்போது டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் சயீப்அலிகானை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்கின்றனர்.

    கரீனாவுடன் அமெரிக்கா செல்கிறார். அங்கு போன பிறகுதான் ஒரு சயீப் தீவிரவாதி என்று தெரிந்து கரீனா அதிர்ச்சியாகிறார். ஒரு விமானத்தை கடத்தி குண்டு வைத்து தகர்க்க சயீப்திட்டமிடுகிறார். அதில் நிருபர் விவேக் ஓபராய் பயணம் செய்கிறார். விவேக் ஓபராய் உதவியுடன் பயணிகளை கரீனாகபூர் காப்பாற்றுவது கிளைமாக்ஸ்.

    இப்படத்தின் விளம்பரத்தில் முதுகைக் காட்டியபடி அரை நிர்வாண கோலத்தில் கரீனா கபூர் போஸ் கொடுத்துள்ளார். அவரது அரை நிர்வாணத்தை உற்றுப் பார்த்தபடி கரீனாவை சயீப் நிற்கிறார்.

    இந்தப் போஸ்டர்தான் இந்தியா முழுக்க ஒட்டப்பட்டுள்ளது. மும்பை நகரில் இந்த போஸ்டர்களைப் பார்த்த சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தெருக்களிலும் சாலைகளிலும் ஒட்டப்பட்டிருந்த கரீனாகபூர் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். குர்பான் திரையிடப்பட உள்ள தியேட்டர்கள் முன்னால் திரண்டும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். குர்பான் படத்தை திரையிட கூடாது என்று தியேட்டர்காரர்களை எச்சரித்துள்ளனர்.

    கரீனாகபூரின் அரை நிர்வாண போஸ்டர் மற்றும் கட்டவுட்டுக்கு சில தொண்டர்கள் சேலை கட்டிவிட்டனர். மேலும் கரீனாகபூர் வீட்டிலும் ஏராளமான தொண்டர்கள் சேலையுடன் திரண்டனர். கரீனாகபூருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். கையில் வைத்திருந்த சேலைகளை வீட்டுக்குள் எறிந்தனர். அப்போது கரீனா வீட்டில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை அப்புறப்படுத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X